'1, 2 இல்ல 7 மாச சம்பளம் தரோம், ஆனா'... 'Layoff அறிவிப்பால் அதிர்ந்துபோயுள்ள ஊழியர்களுக்கு'... 'பிரபல நிறுவனம் கொடுக்கும் சூப்பர் ஆஃபர்!!!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்அக்சென்சர் நிறுவனம் பணிநீக்கம் குறித்து அறிவித்ததை அடுத்து மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகின் முன்னணி ஐடி கன்சல்டிங் மற்றும் ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் அக்சென்சர் முன்னதாக வெளியிட்ட பணிநீக்க அறிவிப்பு அந்நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் சக ஐடி நிறுவன ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பணிநீக்கம் குறித்த அச்சத்திலுள்ள அக்சென்சர் நிறுவன ஊழியர்களுக்கு, அந்நிறுவனம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், நிறுவனத்தை விட்டு வெளியேறுவோருக்கு அக்சென்சர் நிர்வாகம் சுமார் 7 மாத சம்பளத்தை 'Severance Payout' ஆகக் கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யும் போது, 1, 2 அல்லது அதிகப்படியாக 3 மாதம், இல்லையெனில் நிறுவனத்தில் அந்த ஊழியர் பணியாற்றிய வருடத்திற்கு இணையான மாத சம்பளத்தை Severance Payout ஆக வழங்கும். ஆனால் தற்போது அக்சென்சர் நிறுவனம் 7 மாத Severance Payout வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இது தானாக முன்வந்து பணியை ராஜினாமா செய்து வெளியேறும் ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் அக்சென்சர் தெரிவித்துள்ளது. இந்த 7 மாத Severance Payout வழங்கப்படுவதில், 3 மாத நோட்டீஸ் பீரியடுக்கு பதிலான சம்பளம், கூடுதலாக 4 மாத சம்பளம் நிறுவனத்தை விட்டு வெளியேறுவோருக்கு அக்சென்சர் கொடுக்கிறது.
முன்னதாக கடந்த மாதம் அக்சென்சர் நிறுவனம் செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறி, அனைத்து மட்டத்திலும் உள்ள அதன் ஊழியர்களில் 5 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்தது. உலகின் பல நாடுகளிலும் வர்த்தகம் செய்யும் அக்சென்சரில் சுமார் 5 லட்ச ஊழியர்கள் வேலை செய்துவரும் நிலையில், அதில் இந்தியாவில் மட்டும் 2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அதில் 5 சதவீதம் என்றால் குறைந்தபட்சம் 10,000 ஊழியர்கள் இந்தியாவில் பணிநீக்கம் செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இனி சம்பள விஷயத்தில் இது கட்டாயம்"... 'தனியார் துறை ஊழியர்களுக்காக அதிரடி சட்டம்!'... 'UAE-க்கு குவியும் பாராட்டுக்கள்!!!'...
- "6 நாளில்.. 11 லட்சத்து 36 ஆயிரம் கோடி!".. கொரோனாவால் மளமளவென சரிந்த முதலீடுகள்!!.. பெரும் சிக்கலில் முதலீட்டாளர்கள்!
- 'IT ஊழியர்களுக்கு இது செம சான்ஸ்!'... 'அடுத்தடுத்து பிரபல நிறுவனங்கள் வெளியிட்டுள்ள'... 'அசத்தல் அறிவிப்புகள்!!!'...
- "எல்லா டீம்லேயும் அவர கூப்பிடறாங்க... ஆனா, இந்த டீம் மட்டும் அவர கண்டுக்கவே மாட்டேங்கறாங்க!"... - இளம் வீரருக்கு ஆதரவாக கோபத்தில் கொதிச்ச பிரபல வீரர்!!!
- "மறுபடியும், முதல்ல இருந்தா??!"... - 'மீண்டும் இடியாக வந்து இறங்கும்... H1B விசா விவகாரம்!'... புதிய சிக்கலால் கலங்கி நிற்கும் IT ஊழியர்கள்!!!
- "அடுத்த 6 மாசம் அள்ளு விடப் போகுது!.. முடிஞ்சா இத பண்ணுங்க".. 'மீண்டும்' வேலையை காட்டும் 'கொரோனா'!.. அப்படியே 'அந்தர் பல்டி' அடித்த 'நாடு'!
- 'இப்போதான 22,000 பேர தூக்குனாங்க'... 'அதுக்குள்ள மறுபடியும் இத்தன ஆயிரம் பேரா?'... 'பிரபல நிறுவனம் கொடுத்த பேரதிர்ச்சியால்'... 'கலங்கி நிற்கும் ஊழியர்கள்!'...
- 'இனி சின்ன சின்ன ஊர்கள் தான் டார்கெட்'... 'தமிழ்நாட்ல எந்த ஊர்?'... IT ஊழியர்களுக்கு 'ஜாக்பாட்' அறிவிப்பை வெளியிட்ட பிரபல சாஃப்ட்வேர் நிறுவனம்!...
- '6,000 பேருக்கு வேலை, 60,000 பேருக்கு டிரெய்னிங்'... 'அதுவும் எங்க தெரியுமா?'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரபல குழுமம்!'...
- 'சம்பளமே ஒழுங்கா குடுக்கல'... 'பிரபல நிறுவனத்தின் அடுத்தடுத்த விதிமீறல்களால்'... 'அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு'... 'ஹேப்பி மோடில் ஊழியர்கள்!...