புரியுது...! 'ரொம்ப மன உளைச்சலா இருப்பீங்க...' 'அதனால ஒரு பரிசு கொடுக்க போறோம்...' - வேற லெவல் ஆஃபர் அளித்த பிரபல ஐடி நிறுவனம்...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு ஆச்சரிய ஆஃபரை வெளியிட்டுள்ளது பிரபல ஐ.டி நிறுவனம்.

கொரோனாவின் முதல் அலையில் இருந்தே உலகமக்கள் வெளிவராத நிலையில், தற்போது மீண்டும் 2வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதுவும் முதல் அலையில் பரவிய கொரோனா தற்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.

முன்பு கொரோனா பரவல் காரணமாக பல சிறு மற்றும் பெரும் நிறுவனங்கள் தாங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்து வந்தனர். கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மெதுவாக குறையத் தொடங்கியதால், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று வேலை செய்யத் தொடங்கினர். இருப்பினும் ஒரு சில பெரு நிறுவனங்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில்  வீட்டில் இருந்து வேலை செய்யும்போது ஊழியர்களுக்கு மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதாக ஆய்வு முடிவு கூறியுள்ளது.

இந்நிலையில் உலகளவில் வேலைவாய்ப்பு தகவல்களை முன்னணியில் கொடுக்கும் லிங்கெடின் (LinkedIn) நிறுவனம், தனது ஊழியர்களுக்கு ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் லிங்கெடின் நிறுவனத்தின் பணியாற்றும் 15,900 ஊழியர்களுக்கு ஒரு வாரம் விடுமுறையை கொடுத்து அசத்தியுள்ளது.

இதுக்குறித்து கூறிய லிங்கெடின் தலைமை செயல் அதிகாரிகளுள் ஒருவரான டியூலா ஹான்சன் (Teuila Hanson), 'லிங்கெடின் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் ஒரு பரிசு கொடுக்க விரும்பினோம். அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும், அவர்களின் வேலை சுமையையும், மனஉளைச்சளையும் குறைக்க வேண்டும். அதனால் தான் தற்போது, எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு ஒருவாரம் விடுமுறை கொடுத்துள்ளோம், மனதளவில் புத்துணர்ச்சி பெறுவதற்கும், தங்களை Refresh செய்து கொள்வதற்கும், ஊழியர்களுக்கு இந்த விடுமுறை உபயோகமுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்' எனக் கூறியுள்ளார்.

இதற்கு பின் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை பின்வரும் நாட்களில் கொடுக்க உள்ளதாகவும் டியூலா ஹானவும் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்