'ஐடி' நிறுவனங்கள் கையிலெடுத்த புது 'டெக்னிக்'?... ஊழியர்களுக்கு எழுந்த பெரிய 'சிக்கல்'??.. ’கலக்கத்தில் பலர்’... 'காரணம்' என்ன??..

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா தொற்றின் மூலம், அனைத்து தொழில் துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

வைரஸ் மூலம் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க, முன்னணி நிறுவனங்கள் பல ஊழியர்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. தற்போது, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், ஐடி ஊழியர்களுக்கு பெரிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.

இதற்கு மிக முக்கிய காரணம், பிளெக்ஸி ஸ்டாஃபிங் (Flexi Staffing) எனப்படும் கலாச்சாரம் ஆகும். இந்த, பிளக்ஸிங் கலாச்சாரம் எனப்படுவது, நிரந்தமாக ஊழியர்களை பணியமர்த்தாமல், குறுகிய கால திட்டங்களுக்காக, சில ப்ராஜெக்ட்களை முடிக்க வேண்டி, தற்காலிகமாக ஊழியர்களை பணியமர்த்துவதே ஆகும்.

தற்போதுள்ள ஐடி நிறுவனங்கள், பெரும் அளவிலான ஊழியர்களை இந்த பிளெக்ஸி முறையில் தான் வேலைக்கு எடுத்து வருகின்றன. இந்த பணியமர்த்தல் என்பது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. உதாரணத்திற்கு, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 22% அதிகரித்துள்ளது.

மேலும், ஐடி நிறுவனங்கள், தங்களது தேவைக்கு ஏற்ப ஒப்பந்த அடிப்படையில், பணியாளர்களை தேர்வு செய்கின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டின் போது, 3.3 மில்லியனாக இருந்த பிளெக்ஸி ஊழியர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டில் சுமார் 6 மில்லியனைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. சமீப காலமாக, இந்த பிளெக்ஸி முறை, ஐடி துறைகளில் அதிகமாக பரவி வருகிறது.

இதற்கு மிக முக்கிய காரணம், ஐடி துறையில், பரவி வரும் டிஜிட்டல் வளர்ச்சிக்கு மத்தியில், நல்ல திறனுள்ள ஊழியர்கள் ஐடி நிறுவனங்களுக்கு தேவைப்படுகின்றனர். இதனால், இந்த பிளெக்ஸி முறையில் பணிபுரியும் ஊழியர்களில், திறனுள்ளவர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றிக் கொள்ளும் நிறுவனங்கள், மற்றவர்களை விரும்புவதில்லை.

இதனால் தான் தேவைப்படும் போது, ஊழியர்களை எடுத்துக் கொண்டு, வேண்டாம் என்னும் போது அவர்களை விடுவித்து வருகின்றன. இந்த பிளெக்ஸி முறை மூலம் பல ஐடி ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டாலும், ஐடி துறையில் சில துறைகளில் வேலையாட்களுக்கான பற்றாக்குறை உள்ளது. செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் திறன், டேட்டா, கிளவுட் சேவை உள்ளிட்ட துறைகளில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு டிமாண்ட் உள்ளது. ஆனால், ஊழியர்கள் இங்கு அதிகமில்லை. அதாவது, இத்துறை சார்ந்த திறன் உள்ளவர்கள் குறைவு.

எனவே, ஊழியர்கள் நிலவரத்திற்கு ஏற்ப, தங்களது திறனையும் வளர்த்துக் கொள்வதே சிறந்த வழி என்கின்றனர் நிபுணர்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்