‘ஆண்களுக்கு நிகராக கலக்கும் பெண்கள்’... ‘நிப்பான் பெயிண்ட்’ முன்னெடுக்கும் முத்தான ‘nsakthi’ முயற்சி..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இன்று (08.03.2021) உலக பெண்கள் தினம்! Choosetochallenge என்ற இந்த வருட தீம்முடன், ‘ஆண்-பெண் பாகுபாடு’ கொண்டிருக்கும் பழைய சிந்தனைக்கு சவால் விடுத்து, ஆணும் பெண்ணும் சமம் என்ற புதிய மாற்றத்தை கொண்டு வருவதற்காக நாம் அனைவரும் உழைத்துக்கொண்டிருக்கிறோம்.

அப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான ஒரு முயற்சி தான், நிப்பான் பெயிண்ட் தொடங்கிய ‘nsakthi’ திட்டம்! கிராமப்புற பெண்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்!

இந்த ‘nsakthi’ முயற்சியின் மூலம், பெயிண்டிங் பயிற்சி, வியாபாரத் திறன் மேம்பாடு மற்றும் தொழில் வாய்ப்பை ஏற்படுத்துதல் என பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது, நிப்பான் பெயிண்ட். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ‘nsakthi’ திட்டத்தினை கொண்டு இதுவரை 400-க்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த முயற்சியின் நோக்கம், ஆண்களுக்கு சமமாக, கிராமப்புற பெண்களையும் திறமையான தொழில்முறை பெயிண்ட்டர்களாக உருவாக்குவதே! இது ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு தொழில் என்றாலும், அழகியல், சரியான கலவை, வண்ணங்கள் குறித்த அறிவு மற்றும் தேவையான பொறுமை ஆகியவற்றை கற்று நிபுணர்களாக தேர்ச்சியடைகின்றனர், பெண்கள்!

அந்த வகையில் ‘nsakthi’ முயற்சியின் மூலமாக பெண்களுக்கு 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் அவர்களுக்கு சான்றிதல் வழங்கப்படுகிறது. மேலும் நிப்பான் பெயிண்டின் விநியோகஸ்தர்கள் மற்றும் இதர பெயிண்டிங் வேலை வழங்கக்கூடிய உள்துறை வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்கள் மூலம் பயிற்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படுகிறது.

‘nsakthi’ மூலம் பயிற்சி பெற்று தற்போது பெயிண்டராக இருக்கும் துர்கா (வயது 38) என்பவர் கூறுகையில், “நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘nsakthi’ மூலமாக அளிக்கப்பட்ட பயிற்சியில் சேர்ந்தேன். பெருமையோடு சொல்கிறேன், இப்போது என் குடும்பத்தின் பணத்தேவையை என்னால் பூர்த்தி செய்ய முடிகிறது. இந்த பயிற்சி, என்னை ஒரு நேர்த்தியான சுவர் பெயிண்டராக மாற்றியிருக்கிறது. அதனால், என்னைப் போன்ற மற்ற பெண்களையும் ‘nsakthi’ திட்டத்தில் சேர ஊக்குவித்து வருகிறேன்” என பெருமையுடன் கூறியுள்ளார்.

நிப்பான் பெயிண்ட் தலைவர் மகேஷ் ஆனந்த் கூறுகையில், “கிராமப்புற பெண்களின் திறமைளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘nsakthi’ தொடங்கப்பட்டது. இப்போது தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில் ‘nsakthi’ பரந்து விரிந்து, பெண்கள் சுதந்திரமாக இருக்க உதவி செய்துவருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 பெண் பெயிண்டர்களை வெளிக்கொணர திட்டமிட்டுள்ளோம். இந்த சர்வதேச பெண்கள் தினத்தில், இந்தியா முழுவதும் உள்ள பெண்களை நிப்பான் பெயிண்ட் சல்யூட் செய்கிறது” என கூறியுள்ளார். நிப்பான் பெயிண்ட்டின் இந்த ‘nsakthi’ முயற்சியை கடந்த 2018-ம் ஆண்டு Skill India mission பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

‘nsakthi’ பெண்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது என்பதை அரிய இந்த வீடியோவை காண்க:

https://www.facebook.com/NipponPaintIndia/videos/2798587173749143

மற்ற செய்திகள்