'10 சதவீதம் வரை உயர்வு'...'ஜனவரி முதல் அதிரடியாக விலை உயரப்போகும் பொருட்கள்'... கலக்கத்தில் மக்கள்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

எல்இடி டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்றவற்றின் விலை 10 சதவீதம் வரை உயர்கிறது என அதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கொரோனா காரணமாக தொழில்துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக 2021, ஜனவரி மாதம் முதல் எல்இடி டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்றவற்றின் விலை 10 சதவீதம் வரை உயர்கிறது. இவற்றின் முக்கிய உள்ளீட்டுப் பொருட்களான காப்பர், அலுமினியம், ஸ்டீல் போன்றவற்றின் விலை அதிகரிப்பாலும், விமானத்திலிருந்து கொண்டுவரும் போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பாலும் இந்த விலை உயர்வு இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.

சர்வதே அளவில் சப்ளை குறைந்துள்ளதால் டி.வி. பேனல்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வால், பிளாஸ்டிக் விலையும் அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் பல்வேறு பாதிப்புகளை தற்போது ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மூலப் பொருட்கள் விலை உயர்வால் வேறு வழியின்றி விலை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக எல்.ஜி. பேனசோனிக், தாம்ஸன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதேபோன்று சோனி நிறுவனம் விலை உயர்வு குறித்து ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து பேசிய பேனசோனிக் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ மணிஷ் சர்மா, ''உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்வு எங்கள் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும். ஜனவரி முதல் 6 முதல் 7 சதவீதம் விலை உயர்த்தப்படலாம், மார்ச் மாதத்துக்குள் 10 சதவீதம் வரை உயரக்கூடும்’’ எனத் தெரிவித்தார். இதே கருத்தைத் தான் எல்ஜி எலெக்ட்ரானிஸ்க் இந்தியா மற்றும் கோத்ரேஜ் அப்லையன்ஸ் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்றவற்றின் விலை உயரும் என்ற தகவல் நடுத்தர மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்