'ஐடி இளைஞர்களே, இது உங்களுக்கான டைம்'... 'தட்டி தூக்குங்க'...எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 'இன்போசிஸ்-ன்' அறிவிப்பு !

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாகத் தொழில் துறை கடும் சரிவைச் சந்தித்த நிலையில், பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கையில் இறங்கியது. சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வேலையை விட்டுக் கூட நீக்கியது. இதனால் கடந்த வருடம் பலருக்கும் போராட்டமாகவே இருந்தது. இந்நிலையில் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் ஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டு அறிக்கையினை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கம் சற்று ஆறுதலாக இருந்த நிலையில், கொரோனா தொற்று குறையாத நிலையில், இந்த காலாண்டிலும் தங்கள் பணியாளர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதாகவும், இருப்பினும் அவர்களின் அணுகுமுறையின் மூலம் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு சம்பள உயர்வு எதுவும் வழங்காத நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்தாண்டு ஜனவரியில் முதல் சுற்றுச் சம்பள உயர்வை வெளியிட்டது. இதனிடையே வரும் நிதியாண்டில் 26,000 பேரை வேலைக்கு அமர்த்த உத்தேசித்துள்ளதாகவும் அதில் 24,000 பேர் இந்தியாவில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. மேலும் சில ஆயிரம் பேர் வெளியிலிருந்து வரக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக ஃபிரெஷர்ஸ்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பாகக் கருதப்படுகிறது. இதற்கிடையே 2021 மார்ச் காலாண்டின் ஒட்டு மொத்த லாபம் ரூ.5,076 கோடியை இன்ஃபோசிஸ் ஈட்டியுள்ளது. இந்த லாபமானது நிபுணர்கள் கணிப்பைவிடக் குறைவானது எனக் கூறப்படுகிறது. அதேபோல் கடந்த காலாண்டைவிட 2.3% சதவீத லாபம் குறைவாக இருக்கிறது.

செயல்பாட்டு வாயிலாக 2021 மார்ச் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ.26,311 கோடி வருவாய் ஈட்டி இருக்கிறது. இந்த வருவாய் டிசம்பர் 2020 காலாண்டைவிட 1.5% அதிகமாக இருக்கிறது. கடந்த மார்ச் 31, 2021 நிலவரப்படி மொத்தம் 2,59,619 ஊழியர்களை இன்ஃபோசிஸ் கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பணியிடங்களில் 38.6% பெண்கள் ஆவர்.

அதேபோல் மொத்தமாகக் கடந்தாண்டில் 21,000 புதிய ஊழியர்களை நிறுவனம் பணியமர்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் இந்த எண்ணிக்கையில் 19,000 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆகும். மொத்தமாக இன்போசிஸ் நிறுவனம் கடந்தாண்டு சுமார் 36,000 ஊழியர்களை பணியமர்த்தியாக தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்