'மொத்தமாக' 20,000 ஊழியர்களை.. வீ'ட்டுக்கு' அனுப்பும்.. 'பிரபல' நிறுவனங்கள்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இந்திய நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை காரணமாக பிரபல நிறுவனங்கள் பலவும் கொத்துக்கொத்தாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. கடந்த வாரம் காக்னிசென்ட் நிறுவனம் சுமார் 7000 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனம் சிக்கன நடவடிக்கையை காரணம் காட்டி சுமார் 12 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்தது அதிலும் புதிதாக பணிக்கு சேர்ந்தவர்களை பணிக்கு வைத்துக்கொண்டு, அதிக சம்பளம் பெறும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இன்போசிஸ் முடிவு செய்துள்ளது.

இதேபோல பிரான்ஸ் நாட்டை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் கேப்ஜெமினி நிறுவனம் சுமார் 500 பேரை மொத்தமாக வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. மற்ற இரு நிறுவனங்களை ஒப்பிடும்போது கேப்ஜெமினி மிகக்குறைந்த ஊழியர்களையே பணிநீக்கம் செய்துள்ளது.

இந்த பணிநீக்கம் என்பது ஐடி துறைகள் மட்டுமின்றி சுற்றுலா நிறுவனங்கள் , வங்கிகள், ஆட்டோமொபைல் துறை என பல்வேறு துறைகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் வேலை பறிபோகலாம் என்னும் மனநிலை அனைத்து துறை ஊழியர்களையும் ஆட்டிப்படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்