88% சம்பள உயர்வு..இந்தியாவுல அதிக சம்பளம் வாங்கும் CEO க்களின் லிஸ்டுல முன்னேறிய சலீல் பரேக்..யம்மாடி மாசத்துக்கு இவ்வளவு கோடியா?
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ்-ன் CEO சலீல் பரேக்-கிற்கு 88 சதவீத ஊதிய உயர்வை அளிப்பதாக அறிவித்துள்ளது அந்த நிறுவனம்.
Also Read | உலகத்தின் குறைவான உயரம் கொண்ட இளைஞர்.. இவருக்கு இவ்ளோ வயசா..? கின்னஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!
சலீல் பரேக்
1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி பிறந்த சலீல், ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங் படிப்பை ஐஐடி பாம்பேவில் முடித்தார். அதன் பிறகு, அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் சயன்ஸ் மற்றும் மெக்கானிக்கல் எஞ்சியரிங் பிரிவில் முதுகலை பட்டமும் பெற்றார். அதைத் தொடர்ந்து கேப்ஜெமினி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகள் குழுவில் தனது பணியை துவங்கினார்.
இதனிடையே, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாத துவக்கத்தில் பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ்-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக சலீல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சம்பள உயர்வு
இந்நிலையில் சலீல் பரேக்-கிற்கு 88 சதவீத ஊதிய உயர்வை அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது இன்போசிஸ் நிறுவனம். அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சலீலுக்கு ஒரு வருடத்திற்கு 79.75 கோடி ரூபாய் (கிட்டத்தட்ட மாதம் 6.6 கோடி ரூபாய்) ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது. இதனால் இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் நிர்வாக அதிகாரிகளின் பட்டியலில் முன்னேறியுள்ளார் சலீல்.
முன்னதாக வருடத்திற்கு 42 கோடி ரூபாய் ஊதியமாக சலீலுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஊதியத்தில் 88 சதவீத உயர்வு அளித்திருப்பதை தொடர்ந்து இனி வருடத்துக்கு 79.75 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவன பங்குதாரர்கள், நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோரின் ஒப்புதலுக்கு பிறகு ஜூலை 2 ஆம் தேதிமுதல் இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பதவி நீட்டிப்பு
2018 ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தின் CEO வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சலீல் பரேக்-ன் பதவிக் காலத்தை 2027 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிவரையில் வரை நீட்டிப்பதாக அந்த நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் அவருடைய வருடாந்திர ஊதியத்தை அந்நிறுவனம் 88 சதவீதம் உயர்த்தியுள்ளது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்த ஊழியர்களுக்கு எல்லாம் அடிக்கப்போகுது ‘செம’ ஜாக்பாட்.. 6 வருசத்துல இல்லாத அளவுக்கு ஊதிய உயர்வு இருக்கலாம்? ஆய்வில் தகவல்..!
- தலைசுற்ற வைக்கும் காய்கறி விலை!.. ஒரே இரவில்... ராக்கெட் வேகத்தில் உயர்வு!.. எப்படி நடந்தது?
- ‘அடித்தது யோகம்!’.. இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்த பிரபல இந்திய ஐடி நிறுவனம்!.. ‘குஷியில்’ 80% ஊழியர்கள்!
- சக்கையாக பிழிந்து எடுத்த கொரோனா ஊரடங்கு... சோர்ந்து போன ஊழியர்களுக்கு... நிறுவனங்கள் இன்ப அதிர்ச்சி!.. அதிலும் 'இந்த' பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு டாப்!
- "கொரோனாவால கம்பெனிகள் எல்லாம் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு பண்ணிகிட்டு இருக்கு!".. ஆனா இந்த நிறுவனம் பண்றத பாருங்க! வேறலெவல்!
- ‘கொரோனா பாதிப்பால் எடுக்கப்பட்ட முடிவு’... ‘மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி’... வெளிவந்த தகவல்!
- ‘இப்போதைக்கு இதெல்லாம் கிடையாது’... ‘இந்திய நிறுவனத்தின் அதிரடி முடிவு’... ‘ஏமாற்றத்திலும், மூன்று ஆறுதலான விஷயங்கள்’!
- ‘கோல்டு லோன் எல்லாம் அப்புறம்.. மொதல்ல ‘கோல்டுக்கே லோன் வாங்கனும் போலயே?!’.. ‘புதிய உச்சத்தை தொட்ட’ தங்க விலை!
- என்னாது வெங்காயம் 'இவ்ளோ' கம்மி விலைக்கு தர்றாங்களா? முண்டியடித்து அலைமோதிய கூட்டம்! வீடியோ!
- ‘கட்டண உயர்வின்றி தொடர’.. ‘பிரபல’ நெட்வொர்க்கின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ‘அசத்தல் ஐடியா’..