மெட்டாவில் வேலை.. ஆசை ஆசையாய் கனடாவுக்கு பறந்த இந்தியர்.. சேர்ந்து 2 நாள்ல காத்திருந்த அதிர்ச்சி.. இளைஞரின் உருக்கமான போஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்மெட்டா நிறுவனத்தில் பணிபுரிய கனடாவிற்கு சென்ற இந்தியர் ஒருவர் வேலைக்கு சேர்ந்த இரண்டு நாளில் தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக போட்ட உருக்கமான போஸ்ட் பலரையும் கலங்க செய்திருக்கிறது.
Also Read | கும்மிருட்டில் சென்னை.. தமிழகம் முழுவதும் தட்டி வீசும் மழை.. அடுத்த 3 மணி நேரத்துக்கு இப்படித்தானாம்.!
பிரபல சமூக வலை தளங்களான பேஸ்புக், வாட்ஸாப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனம் மெட்டா. இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக மார்க் செயல்பட்டு வருகிறார். சமீப காலங்களில் அதிகமான ஊழியர்களை பணியில் சேர்த்தது மெட்டா. இதன் பலனாக கடந்த செப்டம்பர் இறுதியில் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 87,314 ஆக இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நிறுவனத்தின் 13 சதவீத ஊழியர்கள் அல்லது 11,000 பேரை பணிநீக்கம் செய்வதாக மெட்டா அறிவித்தது.
இது அந்நிறுவனத்தின் ஊழியர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மெட்டாவின் பணிநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவர் தான் ஹிமான்ஷு. இந்தியரான இவர் ஐஐடி கரக்பூரில் படித்திருக்கிறார். மெட்டாவில் வேலை கிடைத்து கனடாவிற்கு சமீபத்தில் குடியேறியுள்ளனர் ஹிமான்ஷு.
இதனிடையே வேலைக்கு சேர்ந்த இரண்டு நாட்களில் தான் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தனது LinkedIn பக்கத்தில் உருக்கமாக எழுதியிருக்கிறார் ஹிமான்ஷு. அந்த பதிவில்,"நான் மெட்டாவில் சேர கனடாவுக்கு இடம் பெயர்ந்தேன். சேர்ந்த 2 நாட்களுக்குப் பிறகு, பெரும் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டு எனது பயணம் முடிவுக்கு வந்தது. அடுத்தது என்ன? என்பது தெரியவில்லை. இந்தியா அல்லது கனடாவில் சாஃப்ட்வெர் எஞ்சினியர் காலியிடம் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு பலரையும் கலங்க செய்திருக்கும் நிலையில், பலர் அவருக்கு நல்ல வேலை கிடைக்க வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல, அன்னேகா படேல் எனும் முன்னாள் மெட்டா ஊழியரின் பதிவும் தற்போது வைரலாகி வருகிறது. தற்போது மகப்பேறு விடுப்பில் இருந்த படேல், தனது மகளின் பசியாற்ற காலை 3 மணிக்கு எழுந்ததாகவும் அப்போது பணிநீக்கம் குறித்த மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருந்ததாகவும் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
அப்போது, பணிநீக்கம் செய்யப்பட்டதாக தனக்கு 5.35 மணிக்கு மின்னஞ்சல் வந்ததாகவும் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார் படேல்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தா அவரு கூட தான்".. இந்திய இளைஞரை கரம்பிடித்த பிரிட்டன் பெண்.. சுவாரஸ்ய பின்னணி!!
- காபி குடிச்சுட்டு இருந்தப்போ வந்த மெயில்.. "ஓப்பன் பண்ண மனுஷன் வாழ்க்கை அடுத்த நிமிஷமே மாறிடுச்சு"..
- "12 வருஷம் ஆகியும் புடிக்க முடியல".. திக்கித் திணறும் போலீஸ்.. "துப்பு குடுத்தா 50,000 டாலராம்".. தீவிரமாக இறங்கிய அதிகாரிகள்
- 42 வருசத்துக்கு முன்னாடி காணாம போன பெண்.. இத்தனை நாளா தேடிட்டு இருந்த குடும்பம்.. "கடைசி'ல இப்ப ஒரு உண்மை தெரிய வந்துருக்கு.."
- "சாக்லேட் சாப்டா போதும்.. 61 லட்சம் சம்பளம்.. வீட்ல இருந்துகூட வேலை பார்க்கலாம்".. நிறுவனம் வெளியிட்ட வித்தியாசமான அறிவிப்பு.. முழு விபரம்.!
- பொருட்கள் வாங்க மளிகை கடைக்கு சென்ற 'பெண்'.. வெளிய வர்றப்போ லட்சாதிபதி.! தாறுமாறாக அடித்த 'அதிர்ஷ்டம்'!!
- "இன்னும் 48 மணி நேரம் தான் உயிரோட இருப்பீங்க.." சோகத்தில் ஆழ்ந்த இளைஞர்.. கடைசி நேரத்தில் மனம் உருக வைத்த 'சர்ப்ரைஸ்'!!
- "புதுசா வீடு வாங்கி, வேல பாத்தப்போ.." தரைக்கு அடியில் கிடந்த பொருள்.. "ஒரு நிமிஷம் அந்த தம்பதிக்கு அள்ளு விட்டுருச்சு"
- "ப்பா.. என்ன இது இப்டி இருக்கு?!.." வாயை பிளந்த மீனவர்கள்.. "100 வருஷத்துக்கு மேல வாழ்ந்துட்டு இருக்காம்.."
- மொத்த பழங்குடிக்கும் ராஜா.. ஆனாலும் இப்படி ஒரு நிலைமை.."எல்லாம் என் மக்களுக்காக தான்".. கலங்கவைக்கும் பின்னணி..!