வாவ், செம கிரியேட்டிவ் JOBS...! 'ஆன்லைன் கேமிங்ல வேலைவாய்ப்புகள், இன்னும் பல...' - நெஞ்சை குளிர வைக்கும் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இந்திய மாணவர்களின் திறமையை உபயோகிக்கும் விதமாக ஆன்லைன் கேமிங் மற்றும் பொம்மை தயாரித்தல் துறையில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் மத்திய கல்வி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

பள்ளி குழந்தைகளின் புதிய தனி திறனை வளர்க்கும் வகையில் பள்ளிகளில் பொம்மைகள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு செயலிகளை உருவாக்கும் திறன் வளர்க்கும் வகையில் பல புதிய கற்பித்தல் பயிற்சிகளை கொண்டுவர போவதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கூறியுள்ளார்.

மேலும் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் இந்த பயிற்சி சர்வதேச தரத்திற்கு ஏற்ப இருக்கும் எனவும், மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த அமைச்சகம் விரைவில் 'ஆன்லைன் விளையாட்டுகளில்' தேசிய அளவிலான ஹேக்கத்தானை ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பொம்மைத் தொழில் மற்றும் ஆன்லைன் கேமிங் மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்