ஒரே நேரத்தில் '10 ஆயிரம்' பேரை.. வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல' நிறுவனம்?.. கலக்கத்தில் ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகம் முழுவதும் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை காரணமாக மிகப்பெரிய நிறுவனங்களும் திவாலாகி வருகின்றன. இதனால் பெரிய, பெரிய நிறுவனங்களும் தொடர்ந்து வேலையில்லா நாட்களை அறிவித்து வருகின்றன.
இந்தநிலையில் உலகம் முழுவதும் 67 நாடுகளில் கிளைகளைக் கொண்ட ஹெச்.எஸ்.பி.சி வங்கி பொருளாதார மந்தநிலை காரணமாக 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிக சம்பளம் வாங்கும் 10 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் யார் அந்த 10 ஆயிரம் பேர் என இந்த வங்கியில் வேலை செய்யும் 2.83 லட்சம் ஊழியர்களும் பயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருபுறம் 4 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும், மறுபுறம் 10 ஆயிரம் பேர் எனவும் மாறிமாறி தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் பணிநீக்க முடிவு செய்தி என்பது உண்மை என்பதால் ஊழியர்கள் மத்தியில் கலக்கம் நிலவி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 200 பேரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்தது. அதில் 150 பேர் இந்தியர்கள். இதனால் இந்தமுறையும் இந்திய ஊழியர்களை இந்நிறுவனம் அதிகளவில் பணிநீக்கம் செய்யுமா? என்ற கவலையும் எழுந்துள்ளது. இந்த பணிநீக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஹெச்.எஸ்.பி.சி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஸ்டீவ் ஜாப்ஸா'?...இல்ல 'ஸ்டீவ் நோ ஜாப்ஸா'?... 'வைரலாகும் போட்டோ'... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!
- 'பேங்க் ஆஃபீசர் வேலைன்னு நம்பி போனோம்'...'இப்போ எல்லாம் போச்சு'...சென்னை இளைஞர்கள் பரிதாபம்!
- '1700' பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு?'...'சென்னை ஊழியர்களின் நிலை?'... பிரபல நிறுவனம் அதிரடி!
- 50 லட்சம் பேர் வேலை இழப்பு.. பணமதிப்பிழப்பு காரணமா?.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!