"நெலம ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு"... '35,000' ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும்... முன்னணி 'நிறுவனம்'!!!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதிலுமுள்ள மக்களிடையே கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
இந்நிலையில், உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்எஸ்பிசி (HSBC) தங்களது கடன்களை ஈடுகட்ட வேண்டி உலகளவில் தங்களின் 35,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், பேரிழப்பில் இருக்கும் தங்கள் நிறுவனத்தை சரி செய்ய இந்த முடிவை எடுத்துள்ளது. லண்டனின் தலைமையகத்தை கொண்டு இயங்கும் எச்எஸ்பிசி வங்கி, சில தினங்களுக்கு முன், வரிக்கு முந்தய லாபங்கள் இரண்டாவது காலாண்டில் 80 சதவீதத்திற்கு மேலாக சரிந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது அவர்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.
சீனா மற்றும் ஹாங்காங்க் நாடுகளில் அதிக லாபம் ஈட்டும் எச்எஸ்பிசி, 3.8 பில்லியன் டாலர் கடன் இழப்பு கட்டணத்தை அறிவித்தது. இது கடந்த ஆண்டை விட மிக மோசம் ஆனதாகவும், ஆய்வாளர்கள் கணிதத்தை விட அதிக நஷ்டமாகவும் அவர்களுக்கு அமைந்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக தான் இந்த பேரிழப்பு நிகழ்ந்ததாக வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே ஊழியர்களை வேலையை விட்டு தூக்க போவதாக HBSC வங்கி அறிவித்திருந்தது. ஆனால், இக்கட்டான சூழ்நிலையில் ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்த வேண்டாம் என முடிவு செய்து அதனை மாற்றிக் கொண்டது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மோசமான செயல்திறன் காரணமாக இந்தாண்டு இறுதிக்குள் இன்னும் சரிவை சந்திக்கும் என கணித்துள்ளது.
அது மட்டுமில்லாமல் சீனாவின் சில சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டங்களுக்கு எச்எஸ்பிசி ஆதரவு தெரிவிப்பதால், ஹாங்காங்கில் அது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதே போல, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான பதட்டமான சூழ்நிலையும் எச்எஸ்பிசி வங்கிக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் சில மாதங்களுக்கு ஊழியர்களை நிறுத்துவது தொடர்பாக அறிவித்திருந்த நிலையில் அதனை தற்போது செயல்படுத்த எச்எஸ்பிசி வங்கி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மொத்தம் 75,000 ஆயிரம் ஊழியர்களை... வீட்டுக்கு 'அனுப்பிய' நிறுவனங்கள்... அதிர்ந்து போன 'தமிழக' மாவட்டம்!
- 'இங்கு மட்டும் உயிரிழப்பு இல்ல'... 'விரைவாக குணமாகும் சர்க்கரை நோயாளிகள்'... 'அப்படி என்ன தான் இருக்கு'?... சென்னைவாசிகள் வந்து குவியும் கொரோனா முகாம்!
- "வேலைய விட்டு தூக்கிட்டாங்க!.. அவங்களே வந்து என்னைய மறுபடியும் சேர்த்துக்க வைக்கிறேன்"..! ஐ.டி. ஊழியர் போட்ட 'மாஸ்டர்' பிளான்!
- 'கதறிய இளைஞர்'... 'எந்த ஒரு மகனுக்கும் இப்படி ஒரு கொடூரம் நடக்கக் கூடாது'... இதயத்தை நொறுக்கிய சம்பவம்!
- 'வேகம் எடுக்கும் கொரோனா'.... 'நல்ல செய்தி சொன்ன முதல்வர்'... இவங்களுக்கு கண்டிப்பா நன்றி சொல்வோம்!
- 'கொரோனாவை வச்சு பிசினஸ்'... 'அதிரவைத்த பிரபல மருத்துவமனை இயக்குநர்'... தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள்!
- ’ஒரே ஒரு ’வாட்ஸ்ஆப்’ மெசேஜில்... '84 நர்ஸ்களை ’வேலையை’ விட்டு தூக்கிய மருத்துவமனை...!' இந்த மாதிரி நேரத்துல ஏன் தூக்கினாங்க...? - அதிர்ச்சியில் செவிலியர்கள்...!
- 'பிரச்சனை செய்து உடலை வாங்கிய சொந்தங்கள்'... 'மயானம் வரை ஊர்வலம்'... எதிர்பாராமல் நடந்த திருப்பம்!
- VIDEO : "அய்யயோ, நான் வரலைங்க, நீங்க வேற ஆள பாருங்க"... 'கொரோனா'வால் உயிரிழந்தவர் சடலத்தை எடுத்த செல்ல மறுத்த 'டிராக்டர்' டிரைவர்... 'ஹீரோ'வாக களமிறங்கி, டிராக்டரை 'ஓட்டிய' டாக்டர்!!!
- 'ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா'... 'நானும் டெஸ்ட் பண்ணிட்டேன்'... ரிசல்ட்டை ட்விட்டரில் தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன்!