'இது ரொம்ப நாளா எதிர்பார்த்த அறிவிப்பு சார்'... 'உற்சாகத்தில் இளைஞர்கள்'... 'HDFC வங்கியின் அடுத்த டார்கெட்'... வெளியான அசத்தல் நியூஸ்!
முகப்பு > செய்திகள் > வணிகம்வங்கிச் சேவையை நாட்டின் மூலை முடுக்கெங்கும் கொண்டு செல்லும் வகையில் புதிய திட்டங்களை HDFC வகுத்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய தனியார்த் துறை வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி, நாடு முழுவதும் 2,764 நகரங்களில் 5,500க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளைக் கொண்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கியில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்பதும் மிகவும் அதிகம். தொழில்முனைவோர், ஐடி துறையில் பணிபுரிவோர், மற்றும் பல தனியார்த் துறைகளில் பணியாற்றும் பலரும் ஹெச்டிஎஃப்சியின் வாடிக்கையாளர்களாக இருந்து வருகிறார்கள்.
ஹெச்டிஎஃப்சி வங்கியில் பணிபுரிவோரின் எண்ணிக்கை மட்டும் 1.16 லட்சம் இருக்கும். இந்நிலையில் வங்கி சேவையை நாட்டின் பல இடங்களுக்கும் கொண்டு செல்ல ஹெச்டிஎஃப்சி புதிய திட்டங்களை வகுத்துள்ளது. குறிப்பாகக் கிராமப்புறங்களில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் சேவை கிடைக்கும் வகையில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய ஹெச்டிஎஃப்சி திட்டமிட்டுள்ளது.
தற்போது வரை ஒரு லட்சம் கிராமங்களுக்கு ஹெச்டிஎஃப்சி வங்கியின் சேவை கிடைக்கும் நிலையில், இந்த எண்ணிக்கையை இரு மடங்காக, அதாவது அடுத்த இரண்டு வருடங்களில் 2 லட்சமாக அதிகரிக்க ஹெச்டிஎஃப்சி வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் அடுத்த ஆறு மாதங்களில் 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க ஹெச்டிஎஃப்சி, முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாகப் பேசிய ஹெச்டிஎஃப்சி வங்கியின் வர்த்தக மற்றும் கிராமப்புற வங்கிப் பிரிவுத் தலைவரான ரகுல் சுக்லா, அடுத்து வரும் நாட்களில் நாட்டிலுள்ள அனைத்து PIN code பகுதிகளுக்கும் வங்கிச் சேவையை விரிவுபடுத்துவோம். அதோடு 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஏடிஎம் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க.. இன்று முதல் அமலாகும் புதிய விதிகள்..!
- என்ன தாத்தா...! 'ஏடிஎம்' கார்டு 'எக்ஸ்பயரி' ஆனது கூட தெரியாம இருக்கீங்க...! 'சரி நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்...' - நூதன மோசடி...!
- 'கொரோனா தடுப்பூசி போட்டீங்களா'?... 'உங்களுக்கு செம ஆஃபர் காத்திருக்கு'... வங்கிகள் அதிரடி!
- அய்யயோ...! அவரு வர்றத பாருங்களேன்...! 'ஆக்சிஜன் மாஸ்கோடு வேலைக்கு வந்த வங்கி ஊழியர்...' ஏன் இப்படி வந்தாரு...? - அதிகாரிகள் சொன்ன காரணம்...!
- 'பேங்க்ல ரூ.13,500 கோடி கடன் வாங்கிட்டு...' மோசடி செய்த 'இந்த நபர்' யார் தெரியுமா...? - இப்போ 'இந்த' நாட்டுல தான் பதுங்கி இருக்காராம்...!
- கொரோனா வந்து ஹாஸ்பிட்டல்ல 'அட்மிட்' ஆனீங்கன்னா 2.50 லட்சம் ரூபாய் தருவோம்...! - தங்கள் ஊழியர்களுக்கு பல 'சலுகைகளை' அள்ளி வழங்கிய பிரபல வங்கி...!
- நாங்க இந்தியாவ விட்டு கெளம்புறோம்...! 'அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல வங்கி...' - என்ன காரணம்...?
- 'நான் தேர்தல்ல நிக்க போறேன்!.. ஓட்டுக்கு பணம் கொடுக்கணும்ல... அதுக்கு Loan கொடுங்க'!.. வேர்த்து விறுவிறுத்துப் போன வங்கி அதிகாரி!
- கூலித் தொழிலாளியின் பேங்க் அக்கவுண்டில் இருந்த ரூ.1 கோடி.. ‘ஆனா இது அவருக்கே தெரியாது’!.. அதிர்ந்துபோன அதிகாரிகள்..!
- 'இணைக்கப்பட்ட 3 வங்கிகள்...' 'மாறப்போகும் IFSC நம்பர்...' வேற என்ன மாற்றங்கள்...? - மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது...!