'2 நாளாக முடங்கியுள்ள ஆன்லைன் சேவை'... ‘கடும் அதிருப்தியில் ஹெச்டிஎஃப்சி கஸ்டமர்ஸ்’!
முகப்பு > செய்திகள் > வணிகம்முன்னணி வங்கிகளில் ஒன்றான ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப் சேவை 2 நாட்களாக முடங்கியுள்ளது, வாடிக்கையாளர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்.டி.எப்.சி வங்கியின், நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவை, கடந்த திங்கட்கிழமை காலை முதல் சரி வர இயங்கவில்லை. மாதத் தொடக்கத்தின் முதல் வேலை நாளே நெட் பேங்கிங் செயல்படாததால், சம்பளதாரர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளதாக ஹெச்.டி.எஃப்.சி வங்கி ட்வீட் செய்த நிலையில், இன்றும் அதே பிரச்சனை எழுந்தது.
இதையடுத்து ஹெச்.டி.எஃப்.சி வங்கி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தொழில்நுட்ப வல்லுநர்கள், கோளாறைச் சரி செய்யும் பணியில், ஓய்வின்றி தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பலரின் வங்கிக் கணக்குகள் செயல்படத் தொடங்கியுள்ளது. சிலருக்கு மட்டும் இந்த சிக்கல்கள் உள்ளது’ என்று தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாக பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாமல் தவித்துவரும் வாடிக்கையாளர்கள், சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ரூ.25 பைசாவுக்கு பிரியாணி பார்சல்’! ‘ஹோட்டலின் அசத்தல் ஆஃபர்’.. அலைமோதிய கூட்டம்..!
- ‘தீபாவளியை முன்னிட்டு’.. ‘இலவச அன்லிமிடட் ஆஃபரை அறிவித்துள்ள பிரபல நிறுவனம்’..
- 'ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் அறிவிப்பு'...'பதறி துடித்து போன வாடிக்கையாளர்கள்'...நடந்தது என்ன ?
- 'திட்டி தீர்த்த நெட்டிசன்கள்'... 'புதிய அதிரடி ஆஃபரை அறிவித்த ஜியோ'...வாடிக்கையாளர்களை கவருமா?
- 'அடப்பாவிகளா..'.. 'லாகின் பண்ணது குத்தமா'.. '2.28 லட்ச ரூபாய லாவிட்டீங்களே'.. உறைய வைக்கும் சம்பவம்!