'இனி சின்ன சின்ன ஊர்கள் தான் டார்கெட்'... 'தமிழ்நாட்ல எந்த ஊர்?'... IT ஊழியர்களுக்கு 'ஜாக்பாட்' அறிவிப்பை வெளியிட்ட பிரபல சாஃப்ட்வேர் நிறுவனம்!...

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா பாதிப்புக்கு இடையே சிறு நகரங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்த ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் சூழலில், தற்போது பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சிறு நகரங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் (HCL) நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மதுரை, நாக்பூர், விஜயவாடா, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்த ஹெச்சிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஏற்கெனவே சுமார் 10,000 ஊழியர்கள் உள்ளபோதும், கொரோனாவால் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ள மக்களை குறித்துவைத்து மதுரை போன்ற நகரங்களில் அதிக ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி விஜயகுமார் தெரிவித்துள்ளார். இந்த உயர்த்தப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளவர்களும், புதிதாக பணியமர்த்த உள்ள ஊழியர்களும் அடங்குவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் மாதத்தில் ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டதை அடுத்து, ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி அங்கிருந்து வேலை செய்து வருகின்றனர். இந்தியாவில் சுமார் 43 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை செய்துவரும் நிலையில், அவர்களில் 90% பேர் தற்போது கொரோனா நெருக்கடியால் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். இன்னும் கொரோனா அச்சுறுத்தல் தணியாததால் மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஊழியர்களை பணியமர்த்த ஹெச்சிஎல் திட்டமிட்டுள்ளது. இதேபோல டிசிஎஸ் நிறுவனமும் ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்