‘ஊழியர்கள் தான் எங்க சொத்து’!.. ரூ.700 கோடி மதிப்பில் ஸ்பெஷல் ‘போனஸ்’.. பிரபல ‘ஐடி’ நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபல ஐடி கம்பெனி தங்களது ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாய் மதிப்புள்ள போனஸ் வழங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல் (HCL) தங்களது ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இலக்கை எட்டியதை அடுத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன் டைம் சிறப்பு போனஸ் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 1 லட்சத்து 59 ஆயிரம் ஊழியர்கள் பயனடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி அப்பாராவ்.விவி, ‘எங்கள் ஊழியர்கள்தான் எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்க சொத்து. இடைவிடாத தொற்றுநோய் இருந்தபோதிலும், எங்கள் ஹெச்.சி.எல் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் மிகுந்த அர்ப்பணிப்பையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்களித்தது. அதனால் 10 பில்லியன் டாலர் வருவாய் இலக்கை எட்ட முடிந்தது’ என தெரிவித்துள்ளார்.
ஹெச்.சி.எல் நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட சேவையுடன் கூடிய அனைத்து ஊழியர்களுக்கும் 10 நாட்கள் சம்பளத்திற்கு சமமான போனஸ் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போனஸ் பிப்ரவரி மாதத்திற்குள் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- புத்தாண்டு பரிசாக ‘சம்பள உயர்வை’ அறிவித்த முதல்வர்.. இன்ப அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்.. எந்த மாநிலம் தெரியுமா..?
- 'திடீரென வந்த மெயிலால் குஷியான ஊழியர்களுக்கு'... 'அடுத்ததாக காத்திருந்த பெரிய டிவிஸ்ட்?!!'... 'ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்!!!'...
- 'கொரோனா பாதிப்பால் விப்ரோ எடுத்துள்ள முடிவு'... 'வெளியான புது அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!!'...
- 'கொரோனா பாதிப்பால்'... 'பிரபல நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு?!!'... 'அதிர்ச்சி தரும் அறிவிப்பால் கலக்கத்தில் ஊழியர்கள்!!!'...
- 'கொரோனாவால் அதிரடி திட்டத்தை கையிலெடுக்கும் இன்ஃபோசிஸ்?!!'... 'அசத்தல் அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஐடி ஊழியர்கள்!!!'...
- 'இந்த நேரத்துலயா இப்படி நடக்கணும்???'... 'திவாலாகும் இரு பெரும் நிறுவனங்கள்?!!'... 'கலங்கி நிற்கும் 25,000 ஊழியர்கள்!!!'...
- 'அடுத்தடுத்த அதிரடிகளால் அசத்தும் அமேசான்!'... 'வெளியான புது அறிவிப்பால் குஷியில் இந்திய ஊழியர்கள்!!!'...
- 'அடுத்தடுத்த புரோமோஷன்கள்.. சம்பள உயர்வை' அறிவித்து மாஸ் காட்டும் 'தாராள' ஐடி நிறுவனம்.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்!!
- 'இனி H-1B விசா தேர்விற்கு புதிய Rule???'... 'திடீர் பரிந்துரையால்'... 'இந்தியர்களுக்கு எழுந்துள்ள அடுத்த பெரும் சிக்கல்!!!'...
- சக்கையாக பிழிந்து எடுத்த கொரோனா ஊரடங்கு... சோர்ந்து போன ஊழியர்களுக்கு... நிறுவனங்கள் இன்ப அதிர்ச்சி!.. அதிலும் 'இந்த' பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு டாப்!