'எதிர்ப்பாக்காத சர்ப்ரைஸ் கொடுத்த கூகுள்'... 'வாயடைத்து போன கூகுள் ஊழியர்கள்'... 'எங்களுக்கும் இத செய்ங்க'... கேட்க தொடங்கிய மற்ற நிறுவன ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

தனது ஊழியர்களின் நலனைக் காப்பதில் கூகுள் நிறுவனம் எப்போதும் ஒரு படி முன்னர் தான் இருக்கிறது எனச் சொல்லலாம். அந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனம் எடுத்துள்ள முடிவு அந்த நிறுவன ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாகப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்தது. பல நிறுவனங்கள் தனது பணியாளர்களை வேலையிலிருந்தும் நீக்கியது. அதனைத்தொடர்ந்து பல நிறுவனங்கள் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைசெய்ய அனுமதித்திருந்தன. இதற்கிடையே ஆறு மாதங்களுக்குப் பிறகு தற்போது உலகெங்கிலும் பல நாடுகளில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுப் பல நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த 6 மாதங்களாக ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யப் பழகி இருந்தாலும், நிறுவனத்தில் சென்று வேலை செய்வதை விட வீட்டில் அதிகமான பணி கொடுக்கப்பட்டது. இதனால் மீட்டிங், இரவு - பகல் வேலை என ஊழியர்களுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராத நிலையில், உடல் மற்றும் மனநலத்தைப் பாதுகாப்பது அவசியம் என்பதை உணர்ந்த கூகுள் நிறுவனம் தொழிலாளர்களுக்கு மூன்று நாட்கள் வாரவிடுமுறை அளித்துள்ளது.

இந்த மூன்று நாட்கள் விடுமுறையில் வெள்ளிக்கிழமை திடீரென அவசர வேலை வந்துவிட்டால் வெள்ளிக்கிழமை விடுமுறையை மற்றொரு நாளில் மாற்றி எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் தொற்றுநோய் முடிவுக்கு வராத நிலையில் தொழிலாளர்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தைப் பாதுகாப்பது அவசியம் என்றும், அதிக அழுத்தம் மன உளைச்சலை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அதன் ஊழியர்களைத் திக்குமுக்காட வைத்துள்ளது.

இதனிடையே பல நிறுவனங்களில் விடுமுறை விதிமுறைகள் என்பது மிகவும் கடுமையாக உள்ளது. இந்தச்சூழ்நிலையில் கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மற்ற நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களிடம் கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பை மேற்கோள் காட்டி விடுமுறையைக் கோரத் தூண்டியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்