'இப்ப 'கூகுள்'லயே ரீசார்ஜ் செய்யலாம்!... நீங்க முயற்சி பண்ணி பாத்தீங்களா?... கூகுளின் புதிய அப்டேட்!'...

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்யும் வேலையை எளிமையாக்கும் விதமாக புதிய வசதியை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது.

தனது திறன்களை மேம்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கூகுள் நிறுவனம், தற்போது இந்தியாவில் Google Search மூலம் மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் Recharge Plan-களை பார்க்கும் வசதி, அதற்கு digital wallet-களில் வழங்கப்படும் சலுகைகளை ஒப்பிட்டு கொள்ளும் வசதி, அதன் பின் மொபைல் ப்ரீபெய்ட் எண்களை ரீசார்ஜ் செய்து கொள்ளும் முறையில், கூகுள் அந்த வசதியை வடிவமைத்துள்ளது.

Google Search-ல் சென்று prepaid mobile recharge அல்லது SIM recharge போன்ற Recharge சம்பந்தமான Key words-களை டைப் செய்தால், முடிவில் வரும் Result-ல் மொபைல் எண், ஆப்பரேட்டர் மற்றும் வட்டம் உள்ளிட்ட தகவல்களை வாடிக்கையாளர்களை நிரப்ப சொல்லி கேட்கும். அவை நிரப்பப்பட்ட பின், browse plans ஆப்ஷன் மூலம் குறிப்பிட்ட தொலைத்தொடர்பு ஆப்பரேட்டரால் கிடைக்கும் எல்லா ப்ரீபெய்ட் ப்ளான்களையும் கூகுள் காட்டும். அதிலிருந்து பயனர்கள் தங்களுக்கு தேவைப்படும் ப்ளானை தேர்வு செய்து, ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

GOOGLE, MOBILE, RECHARGE, PREPAID

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்