விக்கிப்பீடியாவில் 350 திருத்தங்கள்... "சென்னையில் நான் படிச்ச ஸ்கூல் இதாங்க" .. போட்டு உடைத்த 'கூகுள்' சுந்தர் பிச்சை..!
முகப்பு > செய்திகள் > வணிகம்கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சை, தான் சென்னையில் படித்த பள்ளி எது என்பதை விளக்கியுள்ளார்.
சுந்தர் பிச்சை
தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். அதன்பிறகு படிப்படியாக முன்னேறி கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்தார். இந்நிலையில், புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுந்தர் பிச்சை சென்னையில் வசித்தபோது தான் படித்த பள்ளி குறித்து பேசியிருக்கிறார்.
350 திருத்தங்கள்
கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் CEO-வாக சுந்தர் பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அவருடைய விக்கிபீடியா பக்கத்தில் 350 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதில், அவர் படித்த பள்ளி என பல்வேறு கல்வி நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் அவரிடமே இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சுந்தர் பிச்சை," நான் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வன வாணி பள்ளியில் தான் படித்தேன்" என்றார். மேலும், வீட்டிலிருந்தே பள்ளிக்கல்வியை பயின்றதாக குறிப்பிடப்பட்ட செய்தி பிழையானது எனவும் அவர் விளக்கினார்.
கிரிக்கெட் அணி கேப்டன்
அதேபோல, பள்ளிக் காலங்களில் ஸ்கூல் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது பற்றி பேசிய அவர்,"அது தவறான தகவல் என்றும், ஆனால் அப்படி இருக்க (கிரிக்கெட் அணியின் கேப்டனாக) மிகவும் விரும்பியிருக்கிறேன்" என்றும் புன்னகையுடன் பதிலளித்தார்.
கோரக்பூரில் உள்ள ஐஐடியில் மெட்டலர்ஜிகல் எஞ்சினியரிங்கில் பி.டெக் முடித்த சுந்தர் பிச்சை அதன்பிறகு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மெட்டீரியல் சயன்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர், பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள வார்ட்டன் ஸ்கூல் ஆஃப் யூனிவெர்சிட்டியில் மேலாண்மை படிப்பை முடித்தார்.
வேலை
துவக்கத்தில், மெக்கின்சி & கம்பெனியில் மேலாண்மை ஆலோசனை பிரிவில் பணிபுரிந்துவந்த சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். ஆல்பபெட் குழுமத்தின் CEO வாக கடந்த 2019 ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டார். கூகுள் நிறுவனம் ஆல்பபெட் குழுமத்தின் கீழ் இயங்கிவரும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் பிச்சை படித்த பள்ளி எது? என்ற சமீப நாட்களாக கேள்வி எழுந்துவந்த நிலையில், அவரே தற்போது உண்மையை வெளியிட்டிருப்பது தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் பைக் விபத்தில் உயிரிழந்த 2 இளைஞர்கள்.. விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்..!
- ‘ஒரு வாரத்துக்கு முன்பே தோண்டப்பட்ட குழி’.. சென்னை தம்பதி மரண வழக்கில் வெளியான திடுக்கிடும் தகவல்..!
- வீட்டுக்குள்ள சிவப்பு கலர்ல கறை.. சிசிடிவி கேமராவையும் காணோம்.. ஆடிட்டர் தம்பதிக்கு நேர்ந்த சோகம்.. சென்னையையே அதிர வைத்த பகீர் சம்பவம்..!
- சென்னையில் திடீர்னு பிங்க் நிறத்தில் மாறிய ஏரி.. "அந்த தண்ணி கிட்ட போகாதீங்க"..எச்சரிக்கும் நிபுணர்கள்.!
- ஆம்னி பஸ்ஸை கழுவிய டிரைவருக்கு நேர்ந்த சோகம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- தோழியுடன் ரம்ஜான் விருந்துக்கு சென்ற நபர் செஞ்ச காரியம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- ‘எல்லார் கிட்டையும் சொன்ன ஒரே பொய்’.. 5 பெண்களை ஏமாற்றி கல்யாணம் செஞ்ச ‘சென்னை’ வாலிபர்.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
- சென்னை: கழிவறையில் கிடந்த ஆணின் சடலம்.. 1 வருடம் கழித்து சிக்கிய அசாம் வாலிபர்.. திடுக்கிட வைத்த வாக்குமூலம்..!
- வேலூர் டூ சென்னை.. 3 மணிநேரத்துல இதயத்தை கொண்டு சேர்க்கணும்.. ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு குவியும் பாராட்டுகள்..!
- CSK கேப்டனாக MS Dhoni மீண்டும் பதவியேற்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு - KGF meme போட்டு கொண்டாடும் ரசிகர்கள்.!