‘புது பதவி’!.. ‘அசரவைக்கும் சுந்தர் பிச்சை சம்பளம்’!.. ஒரு வருஷத்துக்கு மட்டும் இத்தன கோடியா..?
முகப்பு > செய்திகள் > வணிகம்கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையின் சம்பவள விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை கடந்த 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அங்கு கூகுள் டூல்பார், கூகுள் குரோம் ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு பெரும் பங்காற்றினார். இதனை அடுத்து கடந்த 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் சி.இ.ஓ-வாகவும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது சம்பள விவரங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், சுந்தர் பிச்சையின் வருடாந்திர சம்பளம் 2 மில்லியன் அமெரிக்க டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்புல் சுமார் 14 கோடி. இந்த ஊதிய உயர்வு வரும் 2020-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 240 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (17,07,07,20,000 ரூபாய்) ஸ்டாக் பேக்கேஜ்ஜாக வழங்கப்பட உள்ளது.
இதுபோக இந்த நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றினால் ஆண்டுக்கு இரு பிரிவுகளில் 120 மில்லியன் டாலர் (853 கோடி ரூபாய்) மற்றும் 30 மில்லியன் டாலர் (213 கோடி ரூபாய்) ஸ்டாக் பேக்கேஜ் வழக்கப்பட உள்ளது. ஸ்டாக் பேக்கேஜ் (Stock Package) என்பது குறிப்பிட்ட காலம் அதே நிறுவனத்தில் பணியாற்றினால் அக்காலத்தின் முடிவில் தரப்படும் பங்கு தொகை ஆகும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- செம ஷாக்... 'வருஷம்' முழுக்க கூகுள்ல... 'அடுத்த' தோனியை... விழுந்து,விழுந்து 'தேடிய' இந்தியர்கள்!
- 2019-ல் ‘பாகிஸ்தானியர்களால்’... அதிகமாக தேடப்பட்டவர்களின் ‘டாப் 10’ பட்டியலில் உள்ள ‘இந்தியர்கள்!’...
- 2019 முழுக்க இந்தியர்கள் .. விழுந்து,விழுந்து.. கூகுள்ல 'தேடுனது' இதத்தானாம்!
- 'செம' ஷாக்... ஹைதராபாத் வன்புணர்வு வீடியோ கெடைக்குமா?.. கூகுளையே அதிரவைத்த தேடல்!
- 'பரீட்சை'ல வாங்கிய மார்க் பூஜ்ஜியம்'...'சுந்தர் பிச்சை' கொடுத்த சர்ப்ரைஸ்'...இன்ப அதிர்ச்சியில் மாணவி !
- 'இதை ஏன் கண்டுக்கவே இல்ல'...'மீண்டும் பரபரப்பை கிளப்பிய ஊழியர்'...சர்ச்சையில் 'இன்ஃபோசிஸ்'!
- '30 வருஷ BSNL ஊழியர்.. பல கி.மீ நடந்தே வருவார்'.. '10 மாத சம்பள பாக்கி'.. 'ஒரு நொடியில் எடுத்த பரிதாப முடிவு'!
- ‘இனி மெசேஜிலும் ஃபோட்டோ, வீடியோ ஷேர் செய்யலாம்’.. ‘இந்தியாவில் அறிமுகமானது கூகுளின் RCS மெசேஜிங் சேவை’..
- ‘உலகளவில் பெஸ்ட் CEO-க்கள்’... ‘டாப் 10-ல் இடம் பிடித்த 3 இந்தியர்கள்’... விவரம் உள்ளே!
- 'ஆண்ட்ராய்டு மக்களே உஷார்'...'இந்த 15 ஆப்ஸ் உங்க மொபைல்ல இருக்கா'?...உடனே தட்டி தூக்கிருங்க!