'உங்க கஷ்டம் புரியுது...' அதுக்காக தான் ரூ.1.2 லட்சம் போனஸ்...! - அதிரடியாக அறிவித்த 'பிரபல' நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பண்டிகைக்கான கூடுதல் போனசாக 1,600 டாலரை அறிவித்து அசத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது முதல் தனியார் நிறுவனங்கள் பலவும் Work from home செயல்முறையை பின்பற்றி வருகிறது. இதனால் அந்தந்த நிறுவனங்களுக்கும் செலவுகள் குறைந்துள்ளது என்றும் கூறுகின்றனர்.
தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வந்தாலும் இன்றளவும் ஐ.டி. நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதையே செயல்படுத்தி வருகிறது. பிரபல கூகிள் நிறுவனமும் இதற்கு விதிவிலக்கல்ல.
தற்போது வரை கூகிள் நிறுவனமும் பணியாளர்கள் அலுவலகத்திற்குத் திரும்பும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ள நிலையில் ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் பண்டிகைக்கால போனசை அறிவித்துள்ளது.
அதன்படி கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் கூகுள் இந்த மாதம் 1,600 அமெரிக்க டாலர் அல்லது அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப அதற்கு சமமான மதிப்புடைய தொகையை வழங்கும் என்று கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அதாவது இந்திய மதிப்பின் படி ரூ.1.2 லட்சம் ஆகும்.
இதுக்குறித்து கூறிய அவர், 'கொரோனா வைரஸ் தொற்று மக்களை வீட்டிலிருந்து பணிபுரியும் நிலைக்கு தள்ளியுள்ளது. அவர்கள் என்னென்ன சிரமங்களை சந்திப்பார்கள் என்பதை உணர முடியும்.
இதனால் இந்த பண்டிகை களத்தில் எங்களின் ஊழியர்களுக்கான உதவித்தொகையுடன், இந்த நல்வாழ்வு போனஸும் கூடுதலாக வழங்குவது கூகுள் பணியாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமையும் என நினைக்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
மேலும் வரும் ஜனவரி 10-ஆம் தேதி முதல் கூகுள் ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இனிமேல் 'கூகுள் பே'ல அதெல்லாம் 'சேவ்' பண்ணக் கூடாது...! - புதிய 'கட்டுப்பாடுகள்' குறித்து கூகுள் நிறுவனம்...!
- 'அந்த மாதிரி' கண்டென்ட் 'அப்லோட்' பண்ணுனீங்கனா... 'சும்மா சும்மா கேட்டுட்டு இருக்க மாட்டோம்...' 'உடனே ஆக்சன் தான்...' அதுவாகவே கண்டுபிடிச்சிடும்...! - கூகுள் அதிரடி...!
- VIDEO: ஐயோ, 'அத' பண்ணனும்னு சுத்தமா நியாபகம் இல்ல...! 'வீடியோ கால்'ல பேசுறப்போ 'சுந்தர் பிச்சை' செய்த தவறு...! - வைரலாகும் வீடியோ...!
- 'வீட்ல இருந்து வொர்க் பண்றதுக்கு...' அவ்ளோ 'சம்பளம்'லாம் தர முடியாதுங்க...! - 'வொர்க் ஃப்ரம் ஹோம்' ஊழியர்களுக்கு 'ஷாக்' கொடுத்த 'பிரபல' நிறுவனம்...!
- ‘எல்லாம் கைகூடி வர நேரத்துல இப்படியா நடக்கணும்’!.. கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 4,400 கோடி அபராதம் விதித்த பிரான்ஸ்.. பரபரப்பில் ‘Tech’ உலகம்..!
- ‘அதை பார்த்ததுமே கண்கலங்கிட்டேன்’!.. ‘நான் கடைசியா அழுதது அப்போதான்’.. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உருக்கம்..!
- கூகுள் 'எங்கள' நசுக்க பாக்குறாங்க...! அவங்க பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல...' - இதுக்கு ஒரு முடிவு கட்டியாகணும்...' - 'விஸ்வரூபம்' எடுக்கும் விவகாரம்...!
- ஒரே கம்பெனி...! ஒரே சம்பளம்...! இந்த வருசத்துல 'டாப் சேலரி' வாங்க போற ட்வின்ஸ்...! - எந்த கம்பெனியில ஜாப் கிடைச்சிருக்கு தெரியுமா...?
- 'சம்பளம், போனஸ்ல நாங்க எதுவும் கை வைக்கல...' இங்க வொர்க் பண்ணி 'ரிட்டயர்ட்' ஆனவங்களுக்கும் 'அந்த விஷயத்தை' பண்றோம்...! - பிரபல கம்பெனியின் நிறுவனர் தகவல்...!
- 'இந்தியாவின் மோசமான மொழி எது'?... 'எங்களை பாத்தா இளக்காரமா இருக்கா'... 'கொந்தளித்த நெட்டிசன்கள்'.... வாங்கி கட்டி கொண்ட கூகுள்!