'மீண்டும் தனது வேலையை காட்ட தொடங்கிய தங்க விலை'... இன்றைய நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா பரவல் காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையான மந்த நிலையைச் சந்தித்தது. இதனால் பல பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் பலரும் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றிலிருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதன் காரணமாகத் தங்க விலை கடந்த ஆண்டு முதலே கணிசமாக உயர்ந்து வந்தது.

இந்நிலையில் 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலையில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இதனால் மக்களும் தங்கம் வாங்க இது சரியான நேரம் என்ன எண்ணினர். தங்க விலையும் பவுன் ரூ.34 ஆயிரத்துக்குக் கீழ் வந்தது.

ஆனால் இந்த வாரத் தொடக்கத்திலிருந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நேற்று பவுன் ரூ.33 ஆயிரத்து 656-க்கு விற்றது. இந்தநிலையில் தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்து பவுன் ரூ.34 ஆயிரத்தை நெருங்கியது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33 ஆயிரத்து 912-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 239 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.70-க்கு விற்கிறது.

மற்ற செய்திகள்