'இறங்கி அடித்த தங்க விலை'... 'கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்'... இன்றைய விலை நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

தங்க விலை 2 நாட்களில் பவுனுக்கு ரூ.696 அதிகரித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக தொழில்துறை கடுமையான சரிவைச் சந்தித்தது. இதனால் பலரும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் பக்கம் திரும்பினார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.  இதன் காரணமாகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்க விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

இதனால் தங்க விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தது. இதற்கிடையே கடந்த மாதத்தில் மட்டும் 10 நாட்களுக்கு மேல் தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த மாத துவக்கத்திலிருந்து ஏற்றம் காணப்படுகிறது. கடந்த 1ம் தேதி சவரனுக்கு அதிரடியாக ₹608 உயர்ந்து, கிராம் 4,238க்கும் சவரன் 33,904க்கும் விற்பனையானது.

2ம் தேதியும் 232 உயர்ந்தது. நேற்று முன்தினம் சவரனுக்கு 152 குறைந்த நிலையில், ஒரே நாளில் நேற்று சவரனுக்கு மீண்டும் 608 அதிகரித்து 34,672 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தங்க விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 11 உயர்ந்து ரூ.4345-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.34760-க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.37632-க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 87 ரூபாயும், பவுனுக்கு 696 ரூபாயும் உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்