'புதிய உச்சத்தை எட்டிய தங்க விலை'... 'ஒரே நாளில் எகிறிய பவுன் விலை'... வரலாறு காணாத உயர்வுக்கு என்ன காரணம் ?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

தங்க விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.976 உயர்ந்து ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்து 592-க்கு விற்பனை ஆனது.

கொரோனா ஆரம்பித்த நேரத்திலிருந்து கடந்த 2 மாதங்களாகத் தங்க விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொருநாளும் வரலாறு காணாத உச்சத்தைத் தொடர்ந்து தொட்டு வருகிறது. இது நடுத்தர மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுமோ என்ற கலக்கம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. கடந்த மாதம் 27-தேதியன்று ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தைக் கடந்த நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு (31-ந்தேதி) ரூ.41 ஆயிரத்தையும் தாண்டியது.

இதனிடையே இந்த மாதம் தொடங்கியதிலிருந்து தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் மொத்தமாகச் சேர்த்து நேற்று ஒரே நாளில் தங்க விலை புதிய உச்சத்தை அடைந்து ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 202-க்கும், ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்து 616-க்கும் தங்கம் விற்பனை ஆன நிலையில்,  நேற்று மாலை நேர நிலவரப்படி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, கிராமுக்கு ரூ.122-ம், பவுனுக்கு ரூ.976-ம் அதிகரித்து, ஒரு பவுன் ரூ.5 ஆயிரத்து 324-க்கும், ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்து 592-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வரலாறு காணாத தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணம், அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்கான குறியீடு, வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் சரிந்து வருவது போன்றவை எனச் சுட்டிக் காட்டப்படுகிறது. இந்த காரணங்களை அடிப்படையாக வைத்து பெரிய முதலீட்டாளர்கள் பீதியில் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்து வருவதாலும், முதலீட்டாளர்களைப் போல எல்லா நாட்டு மக்களும் வைப்பு நிதியில் முதலீடு செய்வதைத் தவிர்த்துத் தங்கத்தின் மீது புதிதாக முதலீடு செய்யத் தொடங்கி இருப்பதாலும் தங்கம் விலை இதுபோல் அதிரடியாக உயருவதாக மெட்ராஸ் வைரம், தங்கம் வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்