'தங்கம் வாங்க பிளான் இருக்கா'... 'அப்போ உடனே இத செய்ங்க'... இன்றைய நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > வணிகம்சர்வதேசச் சந்தையில், தங்கத்தின் வீதம் திங்களன்று அவுன்ஸ் ஒன்றுக்கு 0.42 சதவீதம் குறைந்து 1,737.60 அமெரிக்க டாலராக உள்ளது.
கொரோனா காரணமாகப் போடப்பட்ட பொது முடக்கம் காரணமாகப் பொருளாதாரத்தில் பெரும் சுணக்கம் ஏற்பட்டது. இது தங்கத்திலும் எதிரொலித்தது. பலரும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் தங்களின் பக்கம் திரும்பியதால் கடந்த வருடம் மார்ச் மாதம் தொட்டே தங்க விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தது. ஒரு கட்டத்தில் தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டது என்று கூடச் சொல்லலாம்.
இதற்கிடையே 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. அவ்வப்போது சிறிய அளவில் விலையேற்றம் இருந்தாலும் பொதுவாக விலை குறைந்து காணப்பட்டது.
இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு விலை மாற்றமின்றி ரூ.4250-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.34000-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.37128-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 1 கிராம் வெள்ளி 1 ரூபாய் குறைந்து ரூ.70.80க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.70,800 ஆக உள்ளது.
கொல்கத்தாவில் 10 கிராம் 22 காரட் தங்கம் 44,550 ரூபாய்க்கும் 24 காரட்டுக்கு 10 கிராம் தங்கம் 47,220 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மும்பையில் 10 கிராமுக்கு 22 காரட் தங்கத்தின் விலை 43,920 ரூபாயாகவும் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 44,920 ரூபாயாகவும் உள்ளது.
சர்வதேசச் சந்தையில், தங்கத்தின் (Gold) வீதம் திங்களன்று அவுன்ஸ் ஒன்றுக்கு 0.42 சதவீதம் குறைந்து 1,737.60 அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த 30 நாட்களில் அதன் செயல்திறன் 2.63 சதவீதம் குறைந்துள்ளது, இது 47.00 அமெரிக்க டாலருக்குச் சமமாகும்.
தங்க விலையில் பெரிய அளவிற்கு எந்த மாற்றமும் இல்லாமல் விலை கணிசமாகக் குறைந்து காணப்படுவதால் இது தங்கம் வாங்க நினைப்பவர்களுக்குச் சரியான தருணம் என்றே வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொஞ்சம் நிம்மதியை கொடுத்த தங்க விலை'... இன்றைய நிலவரம் என்ன?
- 'நேற்று கொஞ்சம் பயத்தைக் காட்டிய தங்க விலை'... 'இன்றைக்குக் கொஞ்சம் நிம்மதி'... இன்றைய நிலவரம் என்ன?
- 'தொடர்ந்து நல்ல செய்தி சொல்லும் தங்க விலை'... 'இப்படி விலை குறைய என்ன காரணம்'?... இன்றைய நிலவரம் என்ன?
- 'தங்கம் வாங்க சரியான நேரம் போல'... 'ரூ. 34 ஆயிரத்திற்கு கீழ் இறங்கிய விலை'... இன்றைய நிலவரம் என்ன?
- 'கொஞ்சம் ஸ்வீட் எடு, கொண்டாடு'... 'சற்று நிம்மதி கொடுத்த தங்க விலை'... இன்றைய நிலவரம் என்ன?
- 'மீண்டும் பழைய நிலைக்கே சென்ற தங்க விலை'... இன்றைய நிலவரம் என்ன?
- 'இது தான் சரியான நேரம்'... 'ஆர்வம் காட்டும் மக்கள்'... ஒரே நாளில் மாறிய தங்க விலை'... இன்றைய நிலவரம் என்ன?
- '38 ஆயிரத்தை கடந்த தங்க விலை'... 'கவலையளிக்கும் விலையேற்றம்'... இன்றைய விலை நிலவரம் என்ன?
- 'கொஞ்சம் நிம்மதியை கொடுத்த தங்க விலை'... இன்றைய நிலவரம் என்ன?
- 'மீண்டும் பழைய நிலைக்கு சென்ற தங்க விலை'... இன்றைய நிலவரம் என்ன?