ஆபரண 'தங்கத்தின்' விலை அதிரடி குறைவு... இந்த நேரத்தில் வாங்குவது சிறந்ததா?... நிபுணர்கள் எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கடந்த சில மாதங்களாக நடுத்தர மக்களை அலறவைத்த ஆபரண தங்கத்தின் விலை தற்போது சற்றே குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்து ரூ.41,936க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.123 குறைந்து ரூ.5,242க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.60 உயர்ந்து ரூ.82.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து ஏறுமுகம் கண்ட தங்கம் விலை தற்போது சற்றே குறைய ஆரம்பித்து இருப்பதால் இது மேலும் விலை குறையுமா? இல்லை அடுத்த சில நாட்களில் அதிரடியாக விலை உயருமா? என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. மேலும் தங்கம் விலை சரிய காரணம் என்ன என்ற கேள்வியும் உருவாகி இருக்கிறது.
எப்போது எல்லாம் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிக்கிறதோ அப்போது எல்லாம் தங்கத்தின் விலை குறையும்.

தொடர்ந்து டாலர் பலமடைந்தால் தங்கம் அடி வாங்கும் என்று புரிந்து கொள்ளலாம். எனவே தங்கத்தில் புதிதாக முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்குமாறு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தங்கத்தின் விலை இப்போதைக்கு ஒரு சின்ன இறக்கத்தைக் கண்டாலும், அடுத்தடுத்த மாதங்களில் ஒரு நல்ல விலை ஏற்றத்தைக் காணும் என கூறப்படுகிறது. எனவே விலை குறைவாக இருக்கும்போது உங்களுக்கு தேவையான அளவு தங்கத்தை வாங்கி கொள்வதே சிறந்த தீர்வாக இருக்கக்கூடும்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்