ஒரே வாரத்தில் அதானி இழந்தது 1.10 லட்சம் கோடி.. ஏன் தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஆசியாவின் பெரும் கோடீஸ்வரரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரே வாரத்தில் 1.10 லட்சம் கோடி அளவுக்கு சரிந்துள்ளது.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் ஆசியாவின் இரண்டாவது கோடீஸ்வரராக இருப்பவர் தொழிலதிபர் கௌதம் அதானி. இவரின் சொத்து மதிப்பு கடந்த நவம்பர் 25 -ம் தேதி 6.68 லட்சம் கோடியாக உயர்ந்தது.

அதேவேளையில் இந்தியா மற்றும் ஆசியாவின் மற்றொரு கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6.72 லட்சம் கோடி அளவுக்கு சரிந்தது. அதனால் சொத்து மதிப்பில் முகேஷ் அம்பானியை விரைவில் கௌதம் அதானி முந்திவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கௌதம் அதானியின் பங்கு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதனால் ஒரே வாரத்தில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 1.10 லட்சம் கோடி அளவுக்கு குறைந்துள்ளது. தற்போது கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 5.57 லட்சம் கோடியாக உள்ளது. அதேவேளையில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6.9 லட்சம் கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

GAUTAMADANI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்