உலகிலேயே அதிக விலை கொண்ட மரம் தமிழகத்தில் கண்டுபிடிப்பு.. எங்கு தெரியுமா? ஒரு கிலோ 6 லட்சம் ரூபாய்

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

அரபு நாடுகளில் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படும், விலை மதிப்புள்ள அகர் மரத்தை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

Advertising
>
Advertising

அரபு நாடுகளில் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படும், விலை மதிப்புள்ள அகர் மரத்தை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் நாடுகானி பகுதியில்  தாவரங்களை ஆய்வுசெய்யும் ஜீன்பூல் தாவரவியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு அரிய வகை  அகர் மரம் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் கட்டைகள் ஒரு கிலோ  5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை விலை போவதாக தெரியவந்துள்ளது. உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள இம்மரத்தை அதிகளவில் நடவுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிக அரிதான மரம்:

அக்குலேரியா மரத்தின் வழிவகையில் வந்த இந்த அகர்மரம், கற்றாழை மரம் அல்லது கழுகு மரம் எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் ஜப்பான், அரேபியா, சீனா, இந்தியா, மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவற்றில் அதிக அளவு காணப்படும் இந்த அகர்மரம் தான், உலகின் மிக அரிதான விலைமதிப்புமிக்க ஒரு மரமாகும்.

வாசனை திரவியங்கள்:

விலைமதிப்பு மிக்க இந்த அரிதான மரம் சிதைந்த பிறகும், அதன் எச்சங்கள் வாசனை திரவிய உற்பத்தியில் பெருமளவு உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் அகர்மரத்தில் வரும் பிசினிலிருந்து, அவுட் எனும் ஒருவகை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வாசனை திரவியங்களின் தயாரிப்பில் மட்டுமே, ஒரு அத்தியாவசிய எண்ணெய்யாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஒரு கிலோ அவுட் எண்ணெய்யின் விலை 25 லட்ச ரூபாய் ஆகும்.

கடவுளுக்கு உகந்த மரம்:

அகர்மரம் தனது அதிகபட்ச விலையின் காரணமாக, கடவுளின் மரம் அல்லது கடவுளுக்கு உகந்த மரம் எனவும் சில இடங்களில் அழைக்கப்படுகிறது. அக்குலேரியா மரத்தின் வழிவகையில் வந்த பல மரங்கள் சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் உள்ளன. ஆயினும் இதில் விலைமதிப்பு மிக்க அகர் மரம் சட்டவிரோதமாக பல இடங்களில் வளர்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FORESTERS, AGARWOOD, PERFUMES, ARAB, அகர், மரம், வாசனைத் திரவியம், அரபு நாடு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்