‘ஆன்லைன் விற்பனையில் அடுத்த ப்ளான்’ ‘அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் ப்ளிப்கார்ட்’..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இந்திய உணவு சந்தையில் ப்ளிப் கார்ட் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அமேசான் மற்றும் ப்ளிப் கார்ட் ஆகிய இரு நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனங்களாக திகழ்ந்து வருகின்றன. இரு நிறுவங்களும் வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் அடிக்கடி சில ஆஃபர்களை அறிவித்த வண்ணம் உள்ளன. அமேசான் நிறுவனம் மொபைல்போன், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டுமின்றி காய்கறிகள், பலசரக்கு போன்ற விற்பனையிலும் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் உணவு டெலிவரியையும் தொடங்க உள்ளதாக அமேசான் தெரிவித்தது.

இந்நிலையில் ப்ளிப்கார்ட் நிறுவனமும் உணவு உற்பத்தியில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக ‘ப்ளிப் கார்ட் பார்மர்மார்ட்’  (Flipkart Farmermart) என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் உணவு பொருட்கள் விற்பனையில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ப்ளிப் கார்ட் நிறுவனத்தில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனம் உணவு சந்தையில் கோலோச்சி வருவது குறிப்பிடத்தக்கது.

AMAZON, FLIPKART, FLIPKARTFARMERMART, FOOD, RETAIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்