வொர்க் ஃப்ரம் ஹோம்ல கோடீஸ்வரன் ஆயிட்டேன்.. இது எப்படி சாத்தியமாச்சுன்னா.. அனுபவத்தை பகிர்ந்த இளைஞர்

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஐரோப்பாவை சேர்ந்த ஒரு இளைஞர் வீட்டில் இருந்து பணிபுரிந்து கோடீஸ்வரனாகி உள்ளார். இந்த சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

70 வயசுல சிங்கிளா இருந்தேன்.. இப்போ மிங்கிள் ஆயாச்சு.. காதலர் தினத்தில் வைரலாகி உள்ள 73 வயது பாட்டி

உலகையே ஒரே நேரத்தில் வீட்டிற்குள் அடைத்த பெருமை கொரோனா வைரஸையே சேரும். இதனால் அனைவரின் பணிச்சூழலும் மாறியுள்ளது. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதனை என்ஜோய் செய்யும் பலர் இப்டியே இருக்கட்டும் என கூறிவந்தாலும், இன்னொரு தரப்பினரும், அலுவலகத்தில் பணி செய்வது போன்ற வசதி இல்லை என கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் வீட்டில் இருந்து பணி செய்யும் நபர் ஒருவர் ஒரே சமயத்தில் 6 இடங்களில் வேலை செய்வது குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையான காலக்கட்டம்:

'ரெட்டிட்டர்' என்ற இணையதளத்தில் இளைஞர் ஒருவர் தனது பணி அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், 'நான் ஐரோப்பாவை சேர்ந்தவன். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த கடுமையான காலக்கட்டம் தான் என்னை 2-வது தொழில் செய்யும்படி தள்ளியது.

சம்பாத்தியம்:

அதன்படி முயற்சித்ததன் மூலம் நான் தற்போது 6 பணிகளை ஒரே நேரத்தில் செய்து வருகிறேன். இந்த பணிகள் அனைத்து முழுநேர பணிகளாகும். வீட்டில் இருந்து வேலை செய்வதாலே இது சாத்தியமானது. இந்த ஆண்டு நான் 700 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5.27 கோடி) சம்பாதித்து விடுவேன்.

பணியை திறமையாக செய்வேன்:

என் திட்டப்படி 40 வயதிற்குள் கோடீஸ்வரனாக மாறி ஓய்வு பெற முயற்சித்து வருகிறேன். இந்த கனவை நினைவாக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். என் நிறுவனத்தினர் என்னை ஒரு டெவலப்பர் என்ற அளவில் மட்டுமே வைத்துள்ளனர். இந்த பணியை திறமையாக செய்வேன். நான் மற்றவர்களுடன் அதிகமாக நேரம் செலவிடுவது கிடையாது. இதனால் நிறுவனமும் என்னை கண்டுக்கொள்ளாது' என குறிப்பிட்டுள்ளார்.

விமர்சனம்:

இவரின் இந்த செயலை இணையத்தில் பலர் பாராட்டி வருகின்றனர். ஒரே சமயத்தில் ஆறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் கடின உழைப்பைக் குறித்து பலர் பாராட்டினாலும், நேர்மை தவறுவதாக சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.

இதில் ஒருவர், 'ஆறு வேலையா... அடடா.... இதுபற்றி எனக்கு சில டிப்ஸ் தரலாமா, ப்ளீஸ்? ஏனென்றால் நான் வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறேன்' என அறிவுரையும் கேட்டு வருகின்றனர்.

நீளமான கூந்தலினால் கடுப்பான பயணி.. நெட்டிசன்கள் கொடுத்த பதிலடி தான் ஹைலைட்டே.. வைரலாகும் புகைப்படம்

EUROPE MAN, MILLIONAIRE, WORKING IN 6 COMPANIES, இளைஞர், ஐரோப்பா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்