கரெக்ட்டா 7 நிமிஷம் உலகத்தின் நம்பர் 1 பணக்காரர்.. எலான் மஸ்கையே ஓவர்டேக் பண்ணியிருக்காரு.. ஒரு யூடியூபரால எப்படி இது முடிஞ்சுது?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இங்கிலாந்து: இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் சுமார் 7 நிமிடம் உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்த சம்பவம் நடந்துள்ளது.

Advertising
>
Advertising

எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி முதலிடம்:

பொதுவாக பங்குச் சந்தையில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி ஒரு சிலர் தில்லுமுல்லு வேலைகள் செய்வதுண்டு. அதன்படி இங்கிலாந்தை சேர்ந்த மாக்ஸ் போஷ் என்ற யூடியூபர் ஒருவர் எலான் மஸ்க்கை எல்லாம் பின்னுக்கு தள்ளி உலகின் நம்பர் 1 பணக்காரராக மாறியுள்ளார்.

டம்மியான நிறுவனம்:

என்னடா இது பல வருடங்களாக உழைத்தாலும் வராத பெருமை பங்குச் சந்தை ஓட்டைகளை வைத்து வந்துள்ளதே என பலரும் வாயை புலந்து வருகின்றனர். இதற்காக ஒரு டம்மியான நிறுவனத்தைத் தொடங்கி அதை பங்குச் சந்தையில் இடம் பெற வைத்து இந்த நிதி விளையாட்டை நடத்தியுள்ளார் மாக்ஸ்.

இவரின் இந்த தில்லாலங்கடி வேலை குறித்து கூறும்போது, 'இங்கிலாந்தில் ஈஸியாக எந்த நிறுவனத்தையும் தொடங்க முடியும். ஏதாவது வீட்டைக் காட்டிக் கூட நாம் நிறுவனத்தைத் தொடங்கி விட முடியும். அதைப் பயன்படுத்தி நான் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினேன்.

அதுமட்டுமில்லாமல் என்னுடைய நிறுவனத்துக்கு அன்லிமிட்டெட் மணி லிமிட்டெட் என பெயர் சூட்டினேன். எனது நிறுவனம் மாக்ரோனி, நூடில்ஸ் உள்ளிட்டவற்றை தயாரிப்பதாக சித்தரித்தேன். அதை விட காமெடி என்னவென்றால் எனது நிறுவனத்தின் தயாரிப்புப் பொருட்களில் ஒன்றாக farinaceous என்பதையும் சேர்த்தேன்.

மொத்த ஷேர்களின் மதிப்பு 500 பில்லியன் பவுண்டுகள்:

உண்மையை சொல்லப்போனால் அது என்ன பொருள் என்று கூட எனக்கு தெரியாது. அடுத்து ஷேர்களை அறிமுகப்படுத்துவது. சுமார், 10 பில்லியன் ஷேர்களுடன் எனது நிறுவனத்தை அறிமுகப்படுத்தினேன். பின்னர் ஒரு ஷேரை 50 பவுண்டுகளுக்கு விற்றேன். அதன்படி பார்த்தால் எனது நிறுவனத்தின் மொத்த ஷேர்களின் மதிப்பு 500 பில்லியன் பவுண்டுகள் ஆகும்.

உலகின் நம்பர் 1 பணக்காரன்:

அதன் அடிப்படையில் பார்த்தால் நான்தான் உலகின் நம்பர் 1 பணக்காரன். எலான் மஸ்க்கை ஜஸ்ட் லைக் தட் பின்னுக்குத் தள்ளி விட்டேன். ஆனால் எனது நிறுவனம் நிதி மோசடி செய்வதாக பங்குச் சந்தை உணர்ந்தது. இதையடுத்து எனது நிறுவனத்தை மூடி விட்டேன் என்று மாக்ஸ் கூறியுள்ளார்.

மாக்ஸ் அறிமுகப்படுத்திய ஷேர்களின் மதிப்பைப் பார்த்து பங்குச் சந்தை அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து உடனடியாக பங்குச் சந்தை அதிகாரிகள் மாக்ஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில், உங்களது நிறுவனத்தின் பங்கு மதிப்புகளை வைத்துப் பார்க்கும்போது போதிய நிதி ஆதாரம் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகையை நிர்ணயிக்க வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

நிதி மோசடி:

எனவே நீங்கள் நிதி மோசடியில் ஈடுபடுவதாக சந்தேகிக்கிறோம். ஆகையால், உடனடியாக இந்த பங்குகளை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனக் கூறியிருந்தனர்' என கேலியாக கூறியுள்ளார் மாக்ஸ்.

இதையடுத்தே தன்னுடைய உலகத்தின் நம்பர் 1 பணக்கார கடையைக் காலி செய்துள்ளார் மாக்ஸ். ஆனால் இத்தனையும் நடப்பதற்குள் கிட்டத்தட்ட 7 நிமிட நேரம் உலகின் நம்பர் 1 பணக்காரராக (காகித அளவில்) இருந்தது குறிப்பிடத்தக்கது.

ENGLAND, RICH MAN, இங்கிலாந்து, SEVEN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்