'வந்தா எல்லாம் ஒண்ணா வருது'... 'போனா எல்லாம் மொத்தமாக போகுது'... ஒரே நாளில் தலைகீழாக மாறிய எலன் மாஸ்க்கின் நிலை!
முகப்பு > செய்திகள் > வணிகம்டெஸ்லா நிறுவனப் பங்குகளின் விலை திடீரென சரிந்ததால், ஒரேநாளில் 11 பில்லியன் டாலரை எலன் மாஸ்க் இழந்தார்.
உலகப்பணக்காரர்கள் பட்டியலில் எலன் மாஸ்க் முதலிடத்திலிருந்து வந்தார். ஆனால் வியாழக்கிழமை டெஸ்லாவின் பங்குகள் 6.9 சதவீதம் சரிந்து 653.16 டாலராக இருந்ததால், அவரது நிகர சொத்து மதிப்பிலிருந்து 11 பில்லியன் டாலர்கள் குறைந்தது. இதன் காரணமாக பில்லியனர் தொழிலதிபர் எலோன் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்தார்.
உலகின் 500 பணக்காரர்களின் ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில், மஸ்க் 169 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாவது இடத்திற்குச் சென்றுள்ளார். அவரின் சொத்துமதிப்பு திங்களன்று 182 பில்லியன் டாலராக இருந்தது. இதன் காரணமாக ஜெஃப் பெசோஸ் 178 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் முதல் இடத்தைப் பிடித்தார்.
கடந்த ஒரு வார காலமாக டெஸ்லா பங்குகள் அசுரவேகத்தில் உயர்ந்ததன் காரணமாகக் கடந்த திங்களன்று தான் (மார்ச்.15), எலன் மஸ்க் அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸை மீண்டும் முந்தி முதல் இடத்தை பெற்றார். கடந்த ஜனவரி மாதம் முதலே டெஸ்லாவின் மதிப்பு ஏற்ற இறக்கமாகவே இருந்தது. இதனால் இரு தொழிலதிபர்களின் நிலை அடிக்கடி மாறி மாறியே இருந்தது. எலோன் மஸ்க் 2020 ஐ சுமார் 27 பில்லியன் டாலர் மதிப்பில் தொடங்கினார்.
மேலும் முதல் 50 பணக்காரர்களின் பட்டியலில் அவர் இல்லை. அதன்பின் டெஸ்லா பங்குகளில் 794 சதவிகிதம் உயர்ந்ததால், ஜூலை மாதம் மஸ்க் ஏஸ் முதலீட்டாளர் வாரன் பபெட்டை முந்தி ஏழாவது இடத்தைப் பெற்றார். நவம்பரில், மஸ்க் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை இரண்டாவது இடத்திலிருந்து பின்னுக்குத் தள்ளினார். பில் கேட்ஸின் முழுமையான நிகர மதிப்பு 139 பில்லியன் டாலர்களை விட, டெஸ்லா நிறுவனர் எலன் மாஸ்க் கடந்த 12 மாதங்களில் அதிக செல்வத்தைக் குவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அந்த மனுசன் சொன்னது ஒன்னு... இவங்க புரிஞ்சுகிட்டது ஒன்னு!’ - வாட்ஸ் ஆப் பிரைவேசி பாலிசி எதிரொலி!.. ‘எலன் மஸ்க்’ ட்வீட்டை அடுத்து நடந்த ‘வேடிக்கை’!
- 'போன ஜனவரியில 35வது இடம்!'.. இப்ப உலகின் 2வது பணக்காரர்!.. பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி!.. குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி!
- 'என்னப்பா நடக்குது இங்க’... ‘எல்லாமே முன்னுக்குப் பின் முரணா இருக்கு’... ‘கொரோனா பரிசோதனை குறித்து’... ‘கேள்வி எழுப்பிய பில்லியனர்’...!!!
- 'வேணா கைது பண்ணிக்கோங்க’... ‘ஊரடங்கு விதியை மீறி தொழிற்சாலையை திறந்த எலான்’...!