ஒத்த வார்த்தைய விட்டு 7 லட்சம் கோடியை இழந்த எலான் மஸ்க்.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கார் நிறுவனமான டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி விற்று வருகிறது. இதன் மதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது.

Advertising
>
Advertising

ஒட்டுமொத்த உலகமே இன்று வியந்து பார்க்கும் ஒரு முக்கியமான நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா நிறுவனம். இந்நிறுவனம் வெறும் 20 வருடத்தில் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கியுள்ளது என்றே சொல்லலாம்.

கொடிகட்டி பறக்கும் எலான் மஸ்க்:

கொரோனாவிற்கு பிந்தைய புதிய வளர்ச்சிப் பாதையில் எலான் மஸ்க் யாரும் தொட முடியாத உயரத்தைத் தொட்டு உள்ளார். வேகமாக வளரும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குக் கொடுத்த நாசா கொடுத்த ஆர்டர், ஸ்டார்லிங்க் சேவை விரிவாக்கம் என எலான் மஸ்க் தலைமை வகிக்கும் அனைத்து நிறுவனமும் வளர்ச்சி அடைந்து உள்ளது. இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் இயக்குனரான எலான் மஸ்க் பற்றி வெளியிடாத செய்தி நிறுவனங்களே இல்லை என்று கூறலாம். வாரத்திற்கு அவரை பற்றி குறைந்தபட்சம் மூன்று செய்திகளாவது வரும். தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலான் மஸ்க் டெஸ்லா என்ற கார் நிறுவனத்தையும், ஸ்பெஸ் எக்ஸ் என்ற விண்வெளி நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.

எலான் மஸ்க் சொன்ன ஒற்றை வார்த்தை:

இந்நிலையில் டெஸ்லா நிர்வாக இயக்குனர் எலான் மஸ்க் இந்த வருடம் எலக்ட்ரிக் கார் வெளியிடப்படாது என கூறியுள்ளார். இதன் காரணமாக அவர் நிறுவனத்தின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு முன் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது  நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க், டெஸ்லா இந்த வருடம் எலக்ட்ரிக் கார்களை வெளியிடாது என்று கூறியுள்ளார்.

விரட்டி வந்து மண்டையை கொத்தும் காகம்.. தலையில் துண்டுடன் வெளியே செல்லும் பொதுமக்கள்.. அதுக்கு அப்படி என்ன கோவம்?

பங்குச்சந்தையில் டெஸ்லாவின் மதிப்பு:

ஏனென்றால் இந்த ஆண்டு முழுவதும் மனிதர்களுக்கு பதிலாக வேலைக்கு ரோபோக்களை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளோம் எனக் கூறியிருந்தார். இந்த செய்தியை வெளியிட்ட அடுத்த நாளே நியூயார்க் பங்குச்சந்தையில் டெஸ்லாவின் மதிப்பு 12 சதவீதம் குறைந்தது. இதன் காரணமாக தற்போது டெஸ்லா அந்த நிறுவனத்தின் மதிப்பு 100 பில்லியன் டாலர் அளவிற்கு சரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் இல்லாத நேரத்துல அவர கூப்பிடுவேன்.. 2-வது கள்ளக்காதலனுடன் பேசிட்டு இருந்தப்போ வந்த முதல் கள்ளக்காதலன்.. நடந்தது என்ன? அதிர வைக்கும் வாக்குமூலம்

ELON MUSK TESLA, SHARE MARKET VALUE FELL 12 PERCENT, டெஸ்லா நிறுவனம்

மற்ற செய்திகள்