ட்விட்டர் வழக்கு.. எலான் மஸ்க் வைத்திருக்கும் மாஸ்டர் பிளான்.. இத யாருமே யோசிச்சிருக்க கூட மாட்டாங்க..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், வரவிருக்கும் ட்விட்டர் வழக்கில் இரண்டு நிறுவனங்களின் உதவியை நாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | சூடுபிடிக்கும் பிரிட்டன் பிரதமர் தேர்தல்.. மனைவியுடன் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரிஷி சுனக்.. வைரல் புகைப்படம்..!

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். அதன் பிறகு, நடைபெற்ற ட்விட்டர் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார்.

அதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.

வழக்கு

அதன் பிறகு ட்விட்டரில் போலி கணக்குகள் மற்றும் ஸ்பாம்கள் இருப்பதாகவும் அதுபற்றிய தகவலை நிறுவனம் பகிரவில்லை என்றுகூறி ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை நிரந்தரமாக கைவிடுவதாக அறிவித்திருந்தார் மஸ்க். இதனை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. பதிலுக்கு எலான் மஸ்க்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். இந்த வழக்கு மீதான விசாரணை வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

2 நிறுவனங்கள்

இந்த வழக்கில் ட்விட்டர் நிறுவனம் வழங்கும் தரவுகளை, பொதுமக்களின் கணக்குகள் குறித்த விபரங்களை Integral Ad Science (IAS) மற்றும் DoubleVerify ஆகிய இரண்டு நிறுவனங்களின் உதவியுடன் மஸ்க்கின் வழக்கறிஞர்கள் பரிசோதனை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த தொழில்நுட்பங்கள் மூலம், உண்மையான பயனர்கள், ஸ்பாம் மற்றும் automated bot-களை கண்டறியலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஏற்கனவே ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகள் மற்றும் ஸ்பாம்கள் ஆகியவை இருப்பது பற்றி மஸ்க் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது மஸ்க் நீதிமன்றத்தில் இரண்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "2 நாள் தூக்கம் போச்சு".. 14 வருசமா துபாயில் வேலை.. இந்தியருக்கு கூரையை பிய்த்துக் கொண்டு அடித்த அதிர்ஷ்டம்!!

ELON MUSK, ELON MUSK TARGETS AD TECH FIRMS, ELON MUSK TWEETS, எலான் மஸ்க்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்