இது நம்ம லிஸ்டுலேயே இல்லையே.. மஸ்க் மார்க் வச்ச அடுத்த கம்பெனி.. பரபரப்பை கிளப்பிய ட்வீட்..
முகப்பு > செய்திகள் > வணிகம்உலக பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கிய நிலையில் தற்போது இன்னொரு சோசியல் மீடியா நிறுவனம் குறித்து பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.
44 பில்லியன்
ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். அதன்படி டிவிட்டரை சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளார் எலான் மஸ்க்.
புது ஸ்கெட்ச்?
இந்நிலையில் நேற்று தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் மஸ்க் ஆப்பிள் ஸ்டோரில் ஆதிக்கம் செலுத்தும் அப்ளிகேஷன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில்," ட்ரூத் சோசியல் (Truth Social) தற்போது ஆப்பிள் ஸ்டோரில் டிவிட்டர் மற்றும் டிக்டாக்கை முறியடித்து வருகிறது. டிவிட்டர் பேச்சு சுதந்திரத்திற்கு தணிக்கை செய்வதால் ட்ரூத் சோசியல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ட்ரூத் சோசியல் அப்ளிகேஷனின் பெயர் பயங்கரமாக இருப்பதாகவும் அதற்கு பதிலாக ட்ரம்பெட் என பெயரை மாற்றிக்கொள்ளலாம் எனவும் மஸ்க் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். இதில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பை குறிப்பிட்டுத்தான் மஸ்க் இப்படி பேசியிருப்பதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
பேச்சு சுதந்திரம்
ஏற்கனவே டிவிட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் எழுதிய கடிதத்தில் பேச்சு சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், ட்ரூத் சோசியல் குறித்து மஸ்க் பேசியிருப்பதையடுத்து அந்த நிறுவனத்தையும் வாங்க மஸ்க் முயற்சி செய்கிறாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டுவிட்டர் ஓனராக எலான் மஸ்க் பதிவிட்ட ‘முதல்’ ட்வீட்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? ‘செம’ வைரல்..!
- இதுனால தான் டிவிட்டர வாங்குனாரா.. எலான் மஸ்க் போட்ட ட்வீட்.. பல சம்பவம் இருக்கு போலயே..!
- டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய மஸ்க்.. சோமோட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் போட்ட மாஸ் கமெண்ட்..!
- “இனி எந்த திசையில் செல்லும்னு தெரியாது”.. ஊழியர்களிடம் Twitter CEO சொன்ன பரபரப்பு தகவல்..!
- தினமும் 10 ஆயிரம் டாலர் அபராதம்..டொனால்டு ட்ரம்ப்-க்கு செக் வச்ச கோர்ட்.... ஓ இதான் காரணமா?
- திடீரென வைரலாகும் Elon Musk 5 வருச பழைய ட்வீட்.. அப்படியென்ன சொல்லி இருக்கார்..?
- "மிஸ்டர் மஸ்க்..இதான் எங்க ஊரு டெஸ்லா.. இதுக்கு எரிபொருள், கூகுள் Map கூட தேவையில்ல"..ஆனந்த் மஹிந்திராவின் தரமான செய்கை..
- "பேசாம இலங்கையை வாங்கிடுங்க.. சிலோன் மஸ்க்-னு பெயர் வச்சுக்கலாம்".. எலான் மஸ்க்கு அட்வைஸ் செஞ்ச இந்திய தொழிலதிபர்..!
- "ஒருவேளை டிவிட்டர் நிறுவனத்தை வாங்க முடியலைனா என்கிட்ட பிளான் B இருக்கு".. எலான் மஸ்கின் ஸ்மார்ட் மூவ்.. ஆட்டம் சூடு பிடிக்குது..!
- "ட்விட்டர்ல எடிட் பட்டன் வேண்டுமா??.." எலான் மஸ்க் போட்ட ட்வீட்.. பாத்து பண்ணுங்க.. எச்சரித்த ட்விட்டர் 'CEO'..