"என் ஆபிஸ்-ல பெட்ரூம் வச்சது தான் உங்க பிரச்சனையா?".. எலான் மஸ்க்கின் கடுகடு ட்வீட்.. விஸ்வரூபமெடுக்கும் ட்விட்டர் விவகாரம்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

உலகின் டாப் பணக்காரரான எலான் மஸ்க் தனது ட்விட்டர் அலுவலகத்தில் ஊழியர்களுக்காக பெட்ரூம் அமைத்திருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | கையை பதம்பார்த்த பந்து.. பீல்டிங்கின்போது ஏற்பட்ட காயம்.. மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட ரோஹித்.. வீடியோ..!

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் டாப்பில் இருக்கிறார்.

முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க்.

இந்நிலையில், எலான் மஸ்க் ட்விட்டர் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு பெட்ரூம் அமைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியது. ட்விட்டர் தலைமையகத்தில் சில அறைகளை ஊழியர்கள் தூங்கும் வகையில் அவர் மாற்றி அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே ட்விட்டர் ஊழியர்கள் அதிகநேரம் பணிபுரிய வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஊழியர்களுக்கு நெருக்கடி தரும் வழியில் இந்த செயல் அமைந்திருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, ட்விட்டர் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சான்பிரான்சிஸ்க்கோ மாகாணத்தின் மேயர் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க், சான்பிரான்சிஸ்கோ நகர நிர்வாகத்தின் இந்த முடிவை விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர்,"ஃபெண்டானில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்குப் பதிலாக சோர்வடைந்த ஊழியர்களுக்கு படுக்கைகளை வழங்கும் நிறுவனங்களை சான்பிரான்சிஸ்கோ நிர்வாகம் தாக்குகிறது. உங்கள் முன்னுரிமைகள் எவை?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த விவகாரம் இணையத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Also Read | இக்கட்டான சூழ்நிலையில் தவித்த அணி.. காயத்துடன் உள்ளே வந்து காட்டு அடி அடித்த ரோஹித்.. தெறி வீடியோ..!

ELON MUSK, ELON MUSK SLAMS INVESTIGATION, TWITTER HQ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்