நெருங்கும் ட்விட்டர் வழக்கு.. எலான் மஸ்க் எடுத்த பரபர முடிவு.. மொத்த பங்கு சந்தையும் ஷாக் ஆகிடுச்சு..!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகின் நம்பர் 1 பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் தன்னுடைய டெஸ்லா நிறுவனத்தின் 7.9 மில்லியன் பங்குகளை விற்பனை செய்திருப்பது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். அதன் பிறகு, நடைபெற்ற ட்விட்டர் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார்.
அதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.
நிரந்தர முடிவு
ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில் ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகள் மற்றும் ஸ்பாம்கள் அதிகமாக இருப்பதாகவும் அதுகுறித்த விபரங்களை வெளியிடுமாறும் மஸ்க் அறிவித்திருந்தார். ஆனால், ட்விட்டர் நிறுவனம் போலி கணக்குகள் தொடர்பான தகவல்களை வழங்கவில்லை எனக் கூறி அந்நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக மஸ்க் தரப்பு அறிவித்தது. இதனை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. இந்த விசாரணை அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை எதிர்த்து எலான் மஸ்க்-ம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
பங்குகள் விற்பனை
இந்நிலையில், தனது டெஸ்லா நிறுவனத்தின் 7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 7.9 மில்லியன் பங்குகளை மஸ்க் விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மாதத்தின் 5 முதல் 9 ஆம் தேதி வரையிலான நாட்களில் இந்த விற்பனை நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்த தகவல்கள் வெளிவந்து வைரலாக பேசப்பட்ட நிலையில், எலான் மஸ்க் தனது ட்வீட் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர், "ட்விட்டர் டீலை முடிக்கும் பட்சத்தில் அவசரநிலையில் டெஸ்லா பங்குகளை விற்பனை செய்வதை தவிர்ப்பது முக்கியம்" என மஸ்க் குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை அவர் விற்பனை செய்திருந்த நிலையில் தற்போது மேலும் 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்திருப்பது பங்குச் சந்தை நிபுணர்களையே திகைப்படைய செய்திருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நான் சேலஞ்ச் பண்றேன்.. அவர் தயாரா?".. ட்விட்டர் CEO-க்கு சவால் விட்ட எலான் மஸ்க்.. அப்படி என்ன ஆச்சு.. முழு விபரம்..!
- "அவங்க தயாரிச்ச காரைவிட".. புள்ளி விபரங்களை அடுக்கிய நபர்.. கூலாக எலான் மஸ்க் போட்ட கமெண்ட்.. பத்திகிட்ட ட்விட்டர்..!
- எலான் மஸ்க்கின் புதிய பிளான்.. இத யாருமே யோசிச்சிருக்க மாட்டாங்க.. மொத்த அமெரிக்காவும் ஷாக் ஆகிடுச்சு..!
- "மகன நெனச்சு ஒண்ணும் நான் பெருமைப்படல, ஏன்னா.." எலான் மஸ்க் பற்றி தந்தை எரோல் சொன்ன பரபரப்பு கருத்து..
- வானத்துல இருந்து விழுந்த ராட்சத மெஷின்.. ஆடு மேய்க்கப்போன குடும்பத்துக்கு காத்திருந்த ஷாக்.. ஆராய்ச்சியாளர்கள் சொன்ன பகீர் தகவல்.!
- உலகத்தின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க் சோகத்துடன் போட்ட ட்வீட்.. உடனே மஸ்க்கின் அம்மா போட்ட கமெண்ட்.. முழு விபரம்..!
- "நண்பரின் மனைவியுடன் ரகசிய உறவா??.." சர்ச்சையை உண்டு பண்ணிய செய்தி.. எலான் மஸ்க் சொன்னது என்ன?
- "என் மூலமா புது எலான் மஸ்க்-அ உருவாக்க டீல் போட்டாங்க".. மஸ்க்கின் அப்பா வெளியிட்ட பரபரப்பு தகவல்..!
- "இனி அடிக்கடி சட்டை இல்லாம சுத்தணும்.." கடற்கரையில் 'Enjoy' பண்ணும் எலான் மஸ்க்.!.. வாழ்றாருயா மனுசன்
- செவ்வாய் கிரகத்துல வசிக்க இருக்கும் எலான் மஸ்க்கின் குழந்தைகள்?.. தொழிலதிபரின் கேள்விக்கு மஸ்க் சொன்ன பதில்.. திகைச்சுப்போன நெட்டிசன்கள்..!