ஓப்பனா சொல்லிடுறேன்...! நீங்க 'இத' பண்ணலன்னா... 'கம்பெனிய இழுத்து மூட வேண்டியது தான்...' - எலான் மஸ்க் காட்டம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்வாரத்தின் ஏழு நாட்கள் வேலை செய்யாவிட்டால் கம்பெனியை மூடிவிட்டு அனைவரும் வீட்டுக்கு தான் செல்ல வேண்டும் என எலான் மஸ்க் கூறிய சம்பவம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் நிறுவனரும், பணக்காரார் பட்டியலில் இருக்கும் எலான் மஸ்க் அனைத்து துறைகளிலும் கலக்கி வருகிறார். இதில் முக்கியமானது விண்வெளி வீரர்கள் அல்லாத சாதாரண மக்களையும் விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பும் திட்டம்.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஏற்கனவே 3 முறை விண்வெளிக்கு பலரை சுற்றுலா அழைத்து சென்றுள்ளது. இப்போது செவ்வாய் கிரகத்துக்கும், நிலவுக்கும் ராக்கெட் மூலம் மனிதர்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும் ஏற்பாடுகளை எலான் மஸ்க் செய்து வருகிறார்.
இதற்கேன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 'ராபர்ட்' என்ற ராக்கெட் இன்ஜினை தயாரித்து வருகிறது. இந்த ராபர்ட் இன்ஜினை பயன்படுத்தி, ஒரே நாளில் செவ்வாய், நிலவுக்கு செல்லும் வகையில் திட்டமிடபட்டுள்ளது.
இது கோவா பாண்டிச்சேரி செல்லும் டூர் போல இல்லாமல் பல ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் எலான் மஸ்க் தன் நிறுவன ஊழியர்களுக்கு கடந்த வாரம் இ-மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், 'நம் நிறுவனம் செய்து கொண்டிருக்கும் காரியம் சாதாரணமானது இல்லை. மனிதர்களை நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் அழைத்து செல்ல முக்கிய பங்கு வகிக்கும் ராப்டர் ராக்கெட் இன்ஜினின் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வந்தன.
இதில் நம் நிறுவனத்தில் முன்பிருந்த மூத்த அதிகாரிகள் சிலர் வெளியேறியதால் ராப்டர் இன்ஜின் தயாரிப்பு பணியை தொடர்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதில் துரதிருஷ்டவசமாக கடந்த வாரம் இருந்ததை காட்டிலும், இப்போது மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
இதை மறைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. இனி வார இறுதி நாட்களில் விடுமுறை எடுக்காமல், இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்து இந்த இன்ஜின் தயாரிப்பை பணியை முடிக்கவில்லை என்றால், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் திவால் நிலைக்கு சென்று விடும்.
கடுமையான இந்த சூழலில் நிறுவனத்தினர் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். விண்கலத்துக்கு தேவையான, நம்பகமான ராப்டர் இன்ஜின்களை போதுமான அளவில் தயாரிக்காவிட்டால், நட்சத்திர இணைப்பு செயற்கைகோள்களான வி-2, வி-1ஐ விண்வெளிக்கு அனுப்ப முடியாது' எனக் கூறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து எவ்ளோ நன்மைகள் பார்த்தீங்களா..!'- புகழ்ந்து தள்ளும் எலான் மஸ்க்
- எலன் மஸ்க் நிறுவனத்தின் முதல் சேவைக்கே முற்றுப்புள்ளி வைத்த இந்தியா... காரணம் என்ன?
- '7 பெட்ரூம், 10 பாத்ரூம் இருக்கு...' யாருக்காவது என் 'வீடு' வேணுமா...? - 'வீட்டையே' விற்குற அளவுக்கு எலான் மஸ்க்-க்கு அப்படி 'என்ன' கஷ்டம்...?
- என்னது, எலான் மஸ்க் 'ஐபிஎல்' மேட்ச் பார்க்குறாரா...? ஒரு 'ட்வீட்'னால குதூகலமான மேக்ஸ்வெல் ரசிகர்கள்...! - கடைசியில் தெரிய வந்த உண்மை...!
- 'குசும்பு' கொஞ்சம் ஓவர் தான்...! அமேசான் ஓனருக்கு 'கிஃப்ட்' பார்சல் அனுப்பும் எலான் மஸ்க்... 'உள்ள' என்ன வச்சு அனுப்பிருக்காரு தெரியுமா...? 'அத' பார்த்தா மனுஷன் எவ்ளோ கஷ்டப்படுவாரு...!
- நீங்க கேள்விப்பட்டது 'உண்மை' தான்...! 'போதும், முடிச்சுக்கலாம்...' 'மனம்' கலங்கி எலான் மஸ்க் எடுத்த 'அதிரடி' முடிவு...! 'ஸ்ட்ரெஸ்' ரொம்ப அதிகமா இருக்கு...!
- 'மன்னிச்சிடுங்க...' தவறுதலா 'அப்படி' நடந்துடுச்சு...! - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்த பெண்ணை 'கலாய்த்த' எலான் மஸ்க்...!
- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்... எலான் மஸ்க் உட்பட... உலகின் பெரும் செல்வந்தர்கள் 'பில்லியன் டாலர்' கணக்கில் 'வரி ஏய்ப்பு'!.. திடுக்கிட வைக்கும் பின்னணி!
- 'ஒரு ட்வீட் போட்ட கொஞ்ச நேரத்துலையே...' இப்படி ஆகி போச்சே...! - எலான் மஸ்க்-ற்கு ஏற்பட்ட இழப்பு...!
- 'வாழைப்பழ ஜூஸ் குடிச்சிட்டே...' குரங்கு 'அத' கரெக்ட்டா பண்ணிடுச்சு...! - வியப்பில் ஆழ்த்திய எலன் மஸ்க் நிறுவனம்...!