"வேலையைவிட்டு நிறுத்த போறிங்களா?".. ட்விட்டர் ஊழியர்களின் கேள்விக்கு எலான் மஸ்க் அளித்த நூதன பதில்.. என்ன இப்படி சொல்லிட்டாரு?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் ட்விட்டர் ஊழியர்களை காணொளி வாயிலாக சந்தித்து, அவரது கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | "நீ செத்தா யார் வருவா.?" .. இறக்கும் முன்னே தனக்கு கல்லறை கட்டிய பெண்மணி.. இறுதியில் கலங்க வைத்த சோகம்.!

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். அதன் பிறகு, நடைபெற்ற ட்விட்டர் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார்.

அதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.

இப்போதைக்கு வாங்கல

ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனத்தினை வாங்கும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்திருந்தார் எலான் மஸ்க். மேலும், ட்விட்டர் தளத்தில் ஸ்பாம் மற்றும் போலி கணக்குகளின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து போலி கணக்குகளின் விபரங்களை ஒப்படைக்காவிட்டால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை முழுவதுமாக கைவிட இருப்பதாக சமீபத்தில் எலான் மஸ்க் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பணிநீக்கம் இருக்குமா?

இந்நிலையில், முதன்முறையாக ட்விட்டர் நிறுவன ஊழியர்களை காணொளி வாயிலாக சந்தித்தார் மஸ்க். அப்போது, ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் திட்டம் இருக்கிறதா? என சில பணியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மஸ்க், "நிறுவனத்தின் செலவினம், வருவாயை விட அதிகமாக இருக்கிறது. ஆகவே, அதை சரிசெய்ய சில மாற்றங்கள் செய்யப்படும். வேலை பறிபோய்விடுமோ என சிறந்த ஊழியர்கள் கவலைகொள்ள தேவையில்லை" என்றார்.

இந்நிலையில், சிறந்த ஊழியர்கள் மட்டுமே நிறுவனத்தில் தக்கவைக்கப்படுவார்கள், மற்றவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பதைத்தான் மஸ்க் இவ்வாறு கூறியிருப்பதாக தொழில்துறை வல்லுநர்கள் தெரிவித்துவருகின்றனர். முதன்முறை ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்களை சந்தித்த எலான் மஸ்க், பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்.. இப்போ இப்படி ஒரு நிலைமை".. வைரல் புகைப்படத்தின் கலங்கவைக்கும் பின்னணி..!

ELON MUSK, ELON MUSK MEETS TWITTER WORKERS, ELON MUSK MEETS TWITTER EMPLOYEES, எலான் மஸ்க், ட்விட்டர் ஊழியர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்