'ஜெட் வேகத்தில் சென்று தடாலடியாக சரிந்த தங்கம்'... இன்றைய விலை நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

தங்கத்தின் விலை தொடர்ந்து இரு நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

கொரோனா ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக தொழில்துறை கடுமையான தேக்கத்தைச் சந்தித்தது. இதையடுத்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பலரும் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என தங்களது முதலீடுகளைச் செய்திருந்த நிலையில் அதனைத் தங்கத்தின் பக்கம் திருப்பினார்கள். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.

தொழில் துறை தொடர்ந்து சரிவைச் சந்தித்துள்ள நிலையில், தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கம் நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த பல நாட்களாகத் தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.4885 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.272 குறைந்து ரூ.39080க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 41032 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை 1.40 ரூபாய் உயர்ந்து 70.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்