இந்தியாவில் 'பூஜ்ஜியம்' ரூபாய் தாள் ஒண்ணு இருக்கு... அது எதுக்குன்னு தெரியுமா?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இந்தியாவில் 'பூஜ்ஜியம்' ரூபாய் தாள் ஒன்று இருப்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படி ஒரு 'பூஜ்ஜியம்' ரூபாய் தாள் இந்தியாவில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் உள்ளது.

Advertising
>
Advertising

இந்தக் காலத்தில் ஒரு ரூபாய் தாளே கண்ணில் சிக்க மாட்டேங்குது, இதுல பூஜ்ஜியம் ரூபாய் தாள் எப்படி? என கேட்கிறீர்களா? ஊழலை ஒழிக்க போராட வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தும் பொருட்டு இந்த பூஜ்ஜியம் ரூபாய் தாள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சூழலில் இதை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூபாய் தாள் என நினைத்துவிட்டீர்களா? அதுதான் இல்லை.

இது ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ரூபாய் தாள் இல்லை. அதற்காக இதை விளையாட்டு ரூபாய் நோட்டு, சும்மா ஏமாற்றுவதற்காக குழந்தைகள் வைத்திருப்பார்களே அந்த வகை என்றும் நினைக்காதீர்கள். இது விளையாட்டு ரூபாய் தாளும் கிடையாது. தற்போதைய சூழலில் சுமார் 3 மில்லியன் ‘பூஜ்ஜியம்’ ரூபாய் தாள்கள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளன.

இந்த ‘பூஜ்ஜியம்’ ரூபாய் தாளை 5th Pillar என்னும் சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளியிட்டது. ஊழலுக்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்யும் நோக்கில் ஊழலுக்கு எதிரான போராட்டச் சின்னமாக இந்த ‘பூஜ்ஜியம்’ ரூபாய் தாள் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு முதன் முதலாக இந்த ரூபாய் தாள் வெளியிடப்பட்டது.

லஞ்சம் கேட்கும் ஒருவரிடம் இந்த ‘பூஜ்ஜியம்’ ரூபாய் தாளைக் கொடுக்கும் போது அவரின் வெட்கக்கேடான செயலை அவருக்கு நினைவுபடுத்துவது போல் இருக்கும் என இந்த ‘பூஜ்ஜியம்’ ரூபாய் தாளின் நோக்கம் விளக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட 50 ரூபாய் தாளைப் போலவே இந்த ‘பூஜ்ஜியம்’ ரூபாய் தாள் உள்ளது.

அந்த ரூபாய் தாளில், ‘ஊழலை ஒழிப்போம்’ என்று அச்சிடப்பட்டுள்ளது. மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெயர், தொலைபேசி எண் ஆகியனவும் உள்ளது. ஹிந்தி, கன்னடா, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் இந்த பூஜ்ஜியம் ரூபாய் தாள் புழக்கத்தில் உள்ளது.

பூஜ்ஜியம் ரூபாய், பூஜ்ஜியம் ரூபாய் தாள், இந்தியாவில் பூஜ்ஜியம் ரூபாய், ZERO RUPEES NOTE, ELIMINATE CORRUPTION

மற்ற செய்திகள்