‘சீனாவில் இருந்து கிளம்புறோம்’... ‘தூது அனுப்பும் இந்தியா’... ‘திசையை திருப்பும் அமெரிக்கா’!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனாவால் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றான சீனப் பொருளாதாரமே ஆட்டம் கண்டநிலையில், சீனா சந்தித்துள்ள இந்தப் பின்னடைவு இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்குச் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
கொரோனா உருவான சீனாவில் பாதிப்புகள் குறைந்து, அந்நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதால், உயிரிழப்புகளுடன் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றன. இதனால், அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகள், வேண்டுமென்றே கொரோனாவைப் பரப்பியதாக சீனா மீது குற்றஞ்சாட்டி வருகின்றன.
அதிலும், அமெரிக்காவும், சீனாவும் நாளுக்கு நாள் மோதிக்கொண்டுள்ள நிலையில், சீனாவில் இருந்து சுமார் 1,000-த்திற்கும் மேற்பட்ட அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற்ற அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அப்படி வெளியேறும் நிறுவனங்களை, இந்தியாவிற்கு இழுக்கும் சரியான நேரம் வந்துள்ளதால், ஊரடங்கால் நிலைகுலைந்த பொருளாதாரத்தை, மீண்டும் முன்னிறுத்தும் முனைப்பில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
அதன்படி, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு, ஜவுளி, தோல், வாகன உற்பத்தி, உணவுப் பதப்படுத்துதல் உள்ளிட்ட 55 பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்யும் வகையில், ஊக்கச் சலுகை வழங்குவதாக அந்த நிறுவனங்களுடன் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
குறிப்பாக மெட்ரானிக் பிஎல்சி மற்றும் அபோட் ஆய்வகங்களுடன் தங்களது ஆலைகளை இந்தியாவுக்கு மாற்றுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்றும், இந்தியாவின் உற்பத்தித் துறையை 2022ஆம் ஆண்டுக்குள் 25 சதவீதம் வளர்ச்சியை எட்ட வைக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
மற்ற செய்திகள்
'கேம்' விளையாடிய போது... கீழே விழுந்து 'உடைந்து' போன மொபைல்... புது மணப்பெண் எடுத்த 'விபரீத' முடிவு!
தொடர்புடைய செய்திகள்
- ‘44 நாட்கள் கழித்து திறந்தும்’... ‘இந்த ஊர் பக்கம் மட்டும்’... ‘வெறிச்சோடி கிடந்த டாஸ்மாக் கடைகள்’!
- ஊரடங்கால் கிராம மக்கள் பாதிப்பு!.. கோயில் நிர்வாகம் எடுத்த 'அதிரடி' முடிவு!.. மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!
- உலகையே 'மிரட்டும்' கொரோனாவை... 'மிகக்குறைந்த' உயிரிழப்புடன் கட்டுப்படுத்தி... 'வியப்பை' ஏற்படுத்தியுள்ள 'நாடுகள்!'... எப்படி சாத்தியமானது?...
- "போன மாசமே வந்துட்டனே!".. கோயம்பேட்டில் லாரி ஏறி ஊருக்கு போன இளம் பெண்ணுக்கு கொரோனா!.. பரிசோதனை முடிவுக்கு காத்திருக்கும் 82 பேர்!
- 'சளி, காய்ச்சல் தானேன்னு தப்பா நினைச்சிட்டீங்க'... 'வல்லரசுகளுக்கு கொரோனா காட்டிய மரண பயம்'... தரவரிசையில் வந்த இந்தியா!
- 'தமிழக மக்களுக்கு குட் நியூஸ்'... 'ஊரடங்கு முடிந்ததும்'... 'அரசுப் பேருந்துகள் இயக்கம்'... 'முக்கிய விதிமுறைகள் வெளியீடு'!
- 'ஊரடங்கு' முடிந்தால் 'மகிழ்ச்சிதான்' ஆனாலும்... '93 சதவீதம்' ஊழியர்களுக்கு இருக்கும் 'பயம்'... ஆய்வு கூறும் 'தகவல்'...
- 'டீ குடிக்க போனேன்...' 'அசால்ட்டா கூறிய கொரோனா நோயாளி...' 'என் நண்பனுக்கும் கொரோனா, அதான்...'அதிர்ச்சியில் மருத்துவமனை ஊழியர்கள்...!
- 'அங்கு 80% பேருக்கு கொரோனா இருக்கலாம்'... உலகிலேயே 'அதிக' பாதிப்புள்ள நாடுகளில் ஒன்றாக வாய்ப்பு... சர்வதேச அமைப்பு 'அச்சம்'...
- சென்னை: சாலிகிராமம் காவேரி தெரு, சின்மயா நகர், விருகம்பாக்கம் பகுதிகளில் உறுதியான கொரோனா பாதிப்புகள்!