பவர் பத்திரம் ரத்து: ‘ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒப்புதல் தேவையில்லை’.. பதிவுத்துறை உத்தரவு சொல்வது என்ன..?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

தங்கள் சொத்தை பவர் ஏஜென்டுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு, ரத்து செய்ய முடியாமல் அவதிப்படும் சொத்து உரிமையாளர்களுக்கு  தமிழ்நாடு பதிவுத்துறையின் புதிய அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பவர் பத்திரம் ரத்து: ‘ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒப்புதல் தேவையில்லை’.. பதிவுத்துறை உத்தரவு சொல்வது என்ன..?
Advertising
>
Advertising

சென்னை மண்டல பதிவுத்துறை டி.ஐ.ஜி (Deputy Inspector General of Registration) அனைத்து சார் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு, “பொது அதிகார ஆவணம் (ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி) ரத்து குறித்த விவரத்தை உரிமையாளர், முகவருக்கு (ரியல் எஸ்டேட் ஏஜென்ட்) கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு தெரிவித்ததற்கான ஆதாரம் சார் பதிவாளர்களால் கோரப்படுவதாகவும், அவ்வாறான ஆதாரம் தாக்கல் செய்யப்படாதபட்சத்தில், பொது அதிகார ரத்து ஆவணங்களை சார் பதிவாளர்கள் ஏற்க மறுப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன.

Consent not needed to scrap the power of attorney

அதிகார ஆவணத்தை ரத்து செய்ய முகவரின் ஒப்புதல் தேவையில்லை. அசல் ஆவணத்தைத் தாக்கல் செய்ய வலியுறுத்த தேவையில்லை. பொது அதிகார ஆவணம் ரத்து செய்யப்பட்டதாகத் தந்தி அல்லது கடிதம் வாயிலாகத் தெரிவிக்கும் நிகழ்வுகளில், பொது அதிகாரம் வழங்கும் ஆவணத்தை ரத்து செய்ய, ரத்து ஆவணம் பதிவு செய்துகொள்ள உரிமையாளருக்கு சார் பதிவாளர்கள் அறிவுறுத்த வேண்டும்.

வெளிநாட்டில் கையொப்பம் செய்யப்பட்ட ஆவணமாக இருந்தால், இந்திய பதிவு சட்டப்பிரிவில் தெரிவித்தவாறு ரத்து ஆவணம் இந்திய தூதரக அதிகாரி அல்லது பொது அத்தாட்சியாளர் முன்பாக எழுதிக் கொடுக்கப்பட்டு, பதிவு சட்டப் பிரிவின்கீழ் அத்தாட்சி செய்யப்பட்டால் மட்டுமே அதை அங்கீகரிக்க வேண்டும்.

இதன்படி பொது அதிகார ஆவணத்தை ரத்து செய்வதாக இருந்தால், ரத்து ஆவணம் மூலமாக உரிமையாளர் ரத்து செய்ய அறிவுறுத்தப்பட வேண்டும். மாறாக, முகவருக்கு தந்தி அல்லது கடிதம் வாயிலாகப் பொது அதிகார ஆவணத்தை ரத்து செய்வதாகத் தெரிவிப்பதை சார் பதிவாளர்கள் ஊக்குவிக்கக் கூடாது. அதன்படி, பொது அதிகார ஆவணத்தை ரத்து செய்ய உரிமையாளர், முகவருக்கு சட்டப்படி அறிவிப்பு அனுப்பினால் மட்டும் போதும்.

மேலும், உரிமையாளர் முகவருக்கு அறிவிப்பு ஏதும் செய்த விவரத்தை ரத்து ஆவணத்தில் குறிப்பிட வேண்டும் என்றோ, அந்தக் கடிதம் நகலைப் பெற்று அலுவலகத்தில் கோர்வை செய்யவோ, ஒளிவருடல் (லேசர்) செய்யவோ வலியுறுத்தபடவில்லை என்பதில் இருந்து பொது அதிகார ஆவணம் ரத்து செய்யப்படுவதை முதல்வர், முகவருக்கு அறிவிப்பு செய்த பின்னரே, ரத்து ஆவணப் பதிவுக்கு ஏற்க வேண்டும் என்ற சட்ட நிலையேதுமில்லை. எனவே, இனி வருங்காலங்களில் புகாருக்கு இடமின்றிச் செயல்பட சார் பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

REGISTRATIONDEPT, CONSENT

மற்ற செய்திகள்