‘காக்னிசென்ட்டில்’... ‘இளம் பட்டதாரிகளுக்கு அடித்த யோகம்’... 'சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்த முடிவு'!
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபல ஐ.டி. (IT) நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனம், (Cognizant) இந்த ஆண்டு அதிகளவில் பொறியியல் பட்டதாரிகளை இந்தியாவில் இருந்து வேலைக்கு எடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளதால், அவற்றை ஈடுகட்டும் வகையில் வழக்கத்தை விட 30 சதவிகிதத்திற்கும் அதிகமான பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளை தனது நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தப் போவதாக காக்னிசென்ட் தெரிவித்துள்ளது. ஏனெனில், இந்தியாவில் மாணவர்கள் டிஜிட்டல் திறன்களை அதிகளவில் கொண்டுள்ளதாக, காக்னிசென்ட் நிறுவனம் கூறியுள்ளது. இதனால் வழக்கத்தைவிட அதிகளவில் அதாவது 20,000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்களை பணிக்கு அமர்த்த காக்னிசென்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்கும் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வாகும் பொறியியல் பட்டதாரி மாணவர்களின் சம்பளத்தை 18 சதவிகிதம் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வருடாந்திர சம்பளம் 4 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட உள்ளது. அதிலும் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டில், காக்னிசென்ட்டில் இருந்து, 10,000 - 12,000 ஊழியர்களை நீக்கியுள்ள நிலையில், புதிதாக இளம் பொறியாளர்களை நியமிக்க உள்ளதாக காக்னிசென்ட் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஹம்ப்ரிஸ் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் ஐ.டி. துறையில் (IT) அதிக அளவில் ஊழியர்களை நியமித்த வகையில், 2 லட்சம் பணியாளர்களுடன் காக்னிசென்ட் நிறுவனம் இரண்டாம் இடத்திலும், 4 புள்ளி 4 லட்சம் பணியாளர்களுடன் டிசிஎஸ் (TCS) முதல் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "சண்டை போட்ட பசங்க எல்லாம் இங்க வாங்க..." "1330 குறளையும் இப்ப அங்கிளுக்கு எழுதி காட்றிங்க..." போலீசாரின் 'நூதன' தண்டனை...
- ‘சீனாவில் தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்களை மீட்க’... ‘உதவிக்கரம் நீட்டப்படுமா?’... ‘இந்தியா கொடுத்த அதிரடி பதில்’!
- ‘தம்பிய சந்தோஷப்படுத்தப் போறேன்’... ‘ஹார்மோனிகாவை வாயில் வைத்து’... ‘மாணவி செய்த காரியத்தால்’... ‘கடைசியில் நேர்ந்த துன்பம்’!
- 'எங்கள தனியா வச்சா அதனால என்ன?'... 'மருத்துவ முகாமில் சும்மா அதிரவிட்ட'... ‘சீனாவிலிருந்து திரும்பிய இந்திய மாணவர்கள்’!
- என்னையா அடிக்கிற?... 10-ம் வகுப்பு மாணவனால் 12-ம் வகுப்பு 'மாணவனுக்கு' நேர்ந்த விபரீதம்... தொடர் 'பதட்டத்தால்' போலீஸ் கண்காணிப்பு!
- 'வெளிநாட்டில் படிக்கப் போன தமிழக மாணவி'... 'நடுரோட்டில் மர்மநபரால் நடந்த கொடுமை'... 'நிலைகுலைந்துப் போன பெற்றோர்’... ‘நெஞ்சை உலுக்கிய சம்பவம்’!
- ‘சாக்லேட் என நினைத்து’... 'ரசாயனத்தை சாப்பிட்ட'... 'எல்கேஜி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்'!
- 'திடீரென இடிந்து விழுந்த புதிய பாலம்'... 'கத்தி கூச்சலிட்ட மாணவர்கள்'... '10 பேருக்கு நேர்ந்த பரிதாபம்'!
- பெண்கள் விடுதியில்... 7 அடி நீள நாகப் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு... அதிர்ந்த மாணவிகள்... வீடியோ!
- நண்பர்களுடன்... சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை... சுற்றிப் பார்க்க சென்ற... இன்ஜீனியரிங் மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!