‘2020ஆம் ஆண்டு மட்டும்’.. ‘புதிதாக 23 ஆயிரம் பேருக்கு வேலை’.. ‘பிரபல ஐடி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு’..
முகப்பு > செய்திகள் > வணிகம்காக்னிசன்ட் நிறுவனம் 2020ஆம் ஆண்டு புதிதாக 23,000 பேரை வேலைக்குச் சேர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரபல ஐடி நிறுவனமான சிடிஎஸ் எனப்படும் காக்னிசன்ட் நிறுவனம் 18000 பேரை வேலையில் இருந்து நீக்கம் செய்ய உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்நிறுவனம் புதிதாக 23,000 பேரை வேலைக்கு சேர்க்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (இந்தியா) ராம்குமார் ராமமூர்த்தி, “2020ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 23,000க்கும் மேற்பட்ட STEM (Science, Technology, Engineering, Mathematics) துறை சார்ந்த பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்த உள்ளோம். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 66,000 ஊழியர்களை வேலைக்குச் சேர்த்துள்ளோம். இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 9,000 ஊழியர்களை வேலைக்குச் சேர்த்துள்ளோம்.
அதே நேரம் வரவிருக்கும் காலாண்டில் தற்போது வேலை செய்து வருபவர்களில் நடுத்தர மற்றும் மூத்த மட்டம் வரை சுமார் 5000 முதல் 7000 பேரை வேலையில் இருந்து நீக்கம் செய்வதென கடினமான முடிவை எடுத்துள்ளோம். இது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே” எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘குழந்தைகள் தினம்தான்’.. ‘ஆனால் ஹோம்வொர்க் பெற்றோருக்கு’.. ‘பள்ளிக் கல்வித்துறையின் வித்தியாசமான முயற்சி’..
- 'பிறந்த நாள்' கேக் வெட்டும்போது 'கேங் வார்'.. 'திருக்குறள்' இம்போசிஷன் கொடுத்து.. காவல்துறை தண்டனை!
- ‘வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும்’.. ‘பிரபல ஐடி நிறுவனத்தின் அசத்தல் ஐடியா’..
- 'சம்பளத்தில் அதிரடி மாற்றம்’... 'ஆட்கள் குறைப்பு'... ‘பிரபல நிறுவனம்’... ‘ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதம்’!
- 'இதுகூட தெரியாம'...'எதுக்கு 'பள்ளிக்கு' வர்ற'... தலைக்கேறிய கோபத்தில்...'ஆசிரியையின் கணவர்' செய்த செயல்!
- ‘7000 பேரை வீட்டுக்கு அனுப்பும்’.. ‘பிரபல நிறுவனம்’... ‘கலக்கத்தில் ஊழியர்கள்’!
- தோழியுடன் பேசிக்கொண்டிருந்த இஞ்ஜினியரிங் மாணவரை ஆற்றில் தூக்கி வீசிய கும்பல்..! திருச்சி அருகே பரபரப்பு..!
- 'அய்யோ அப்படி இல்ல தாத்தா'.. 'முதியவர்களுக்கு பாடம்'...'குழந்தைகளை ஆசிரியர்களாக்கிய அரசுப்பள்ளி'!
- ‘சம்பளத்தில் மாற்றம் செய்ய’... ‘பிரபல நிறுவனம் எடுத்துள்ள முடிவு’... விவரம் உள்ளே!
- வெவ்வேறு ஜாதி.. 'காதலுக்கு' கடும் எதிர்ப்பு.. லாட்ஜில் ரூம் எடுத்து.. 'காதலர்கள்' தற்கொலை!