'காக்னிசண்ட்' நிறுவனத்தின் அதிரடி முடிவு... பறக்கும் புகார்களால் 'கலங்கிப்போன' ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > வணிகம்காக்னிசண்ட் நிறுவனம் அதன் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல உலகளாவிய அளவில் வேலையிழப்பு நடவடிக்கைகள் தீவிரமடைய தொடங்கியுள்ளன. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை சத்தமின்றி பணிநீக்கம் செய்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட் அதன் பெஞ்ச் ஊழியர்களில் ஆயிரக்கணக்கானோரை வேலையில் இருந்து நீக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் சுமார் 18 ஆயிரம் ஊழியர்களை பெஞ்ச் செய்தபின் பின் அதிகளவிலான பணிநீக்கங்களை காக்னிசண்ட் செய்து வருவதாக சென்னை மற்றும் கர்நாடகா ஊழியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
மேலும் இதுதொடர்பாக சென்னை மற்றும் கர்நாடகாவை சேர்ந்த ஊழியர்கள் ஐடி ஊழியர்கள் சங்கத்திற்கு புகார்கள் அனுப்பி இருக்கிறார்களாம். இதனால் இந்த பிரச்சினை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெஞ்ச் ஊழியர்கள் 41 நாள் கழித்து ராஜினாமா செய்யச்சொல்லி தங்களை கட்டாயப்படுத்துவதாக ஏற்கனவே இந்நிறுவனத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் இந்நிறுவனத்துக்கு 2.9 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை டிசிஎஸ் நிறுவனத்துக்கு அடுத்து இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களை கொண்ட நிறுவனமாக காக்னிசண்ட் திகழ்கிறது. எனவே இந்த பணி நீக்கத்தால் இந்திய ஊழியர்களே அதிகம் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'H-1B விசா' தடையில் திடீர் திருப்பம் - 'வெளிநாட்டு' திறமையாளர்களை வளைத்துப்போட டிரம்ப் 'புது பிளான்'!
- 'அமெரிக்கா என்ன எங்கள வேண்டாம்னு சொல்றது!? நாங்க வேற ப்ளான் பண்ணிட்டோம்!'.. இந்தியர்களின் அடுத்த 'வேலைவாய்ப்பு ஹாட்ஸ்பாட்' இது தான்!
- VIDEO: ‘8 வருஷமா குழந்தை இல்ல’.. கண்மூடித்தனமாக தாக்கிய கணவன்.. தடுத்த ‘செல்லநாய்’.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..!
- "நாங்க இல்லனா உலகப் பொருளாதாரமே இல்ல!".. கொந்தளித்த ஐடி ஊழியர்கள்!.. ட்ரம்ப் அரசிற்கு சரமாரி கேள்வி!.. பூதாகரமான H-1B விசா விவகாரம்!
- ஹெச்-1 பி விசா: டிரம்பின் முடிவால் 'ஆடிப்போன' ஐடி துறை... கலங்கும் இந்தியர்கள்?
- சென்னையில் இன்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
- ‘இப்போதைக்கு இதெல்லாம் கிடையாது’... ‘இந்திய நிறுவனத்தின் அதிரடி முடிவு’... ‘ஏமாற்றத்திலும், மூன்று ஆறுதலான விஷயங்கள்’!
- 'எங்களுக்கே இங்க ஒண்ணும் இல்ல’... ‘இந்தியர், சீனர்களுக்கு வழங்குவதை நிறுத்துங்க’... ‘அதிபர் ட்ரம்புக்கு கடிதம்’!
- ‘பிரபல ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்’... ‘கொரோனா பாதிப்பால்’... 25% கூடுதல் சம்பளம்!
- ‘உலகமே கொரோனாவ ஒழிக்க போராடிட்டு இருக்கு’.. ‘இந்த நேரத்துல இப்டியா பண்றது’.. சாப்ட்வேர் இன்ஜினீயர் செஞ்ச காரியம்..!