'45 ஆயிரம் பேருக்கு வேலை ரெடி...' 'ஒரு லட்சம் பேருக்கு டிரெயினிங் கொடுக்க போறோம்...' - பிரபல ஐடி நிறுவனத்தின் மலைக்க வைக்கும் அறிவிப்புகள்...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனம் காக்னிசன்ட். இந்நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் சுமார் ஒரு லட்சம் பேரை புதிதாக வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 45 ஆயிரம் புதிய இந்திய பட்டதாரிகளை பணியமர்த்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

காக்னிசண்ட் 2021-ஆம் ஆண்டில் 30,000 புதிய பட்டதாரிகளை பணியமர்த்த எதிர்பார்க்கிறது. கடந்த ஜூன் மாதம் வரையிலான காலாண்டின் இறுதியில், இந்நிறுவனம் மூன்று லட்சம் ஊழியர்களை கொண்டிருந்துள்ளது. இந்நிலையில், இது குறித்து காக்னிசன்ட் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஹம்ப்ரிஸ் அவர்கள் கூறுகையில், "இதன் பின்னணியில் இழப்பீட்டு சரிசெய்தல், வேலை சுழற்சிகள், மறுசீரமைப்பு மற்றும் பதவி உயர்வுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் உள்ளிட்ட பலவற்றைக் குறைப்பதற்கான தொடர் நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

இதனால், 2021 ஆம் ஆண்டில் சுமார் 1,00,000 பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம்.மேலும் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு பயிற்சி கொடுக்கவும் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. நிறுவனத்தின் உயர் நிர்வாகிகள், இந்தியாவில் அதிக ஜூனியர் மற்றும் நடுத்தர அளவிலான பதவிகளில் செயல்திறன் விகிதம் முக்கியமாக உள்ளது. இது உலகளாவிய நிகழ்வுதான் என்பதை அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், எங்கள் வெற்றி விகிதங்களும் தொடர்ச்சியான முன்பதிவு வேகத்திற்கு எங்களை நன்கு நிலைநிறுத்துகிறது. டிஜிட்டல் வருவாய் வளர்ச்சி காலாண்டில் ஆண்டுக்கு 20 சதவீதமாக அதிகரித்தது, "என்று அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்