உங்களுக்கு கொஞ்சம் கூட 'பொறுப்பு' இல்ல.... அதனால தான் 'எங்களுக்கு' இவ்ளோ கஷ்டம்... பிரபல ஐடி நிறுவனத்தின் மீது... 3000 ஊழியர்கள் வழக்கு!
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் மீது 3000 ஊழியர்கள் வழக்கு தொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட் சிக்கன நடவடிக்கையாக 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்தது. அதன் ஒரு பகுதியாக நடுத்தர மற்றும் சீனியர் லெவலில் உள்ள சுமார் 10,000 முதல் 12,000 ஊழியர்களை தற்போது இருக்கும் பொறுப்பில் இருந்து விடுவிக்க முடிவு செய்தது. இந்நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்துக்கு சில பணிகளை செய்து கொடுக்கிறது. இதனால் அந்த பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் இந்த ஆண்டு முதல் சில வேலைகளை குறைத்துக்கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் அங்கு பணியாற்றி வரும் 6000 ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே தங்களுடைய நிறுவனத்தோடு தொடர்புடைய வேறு நிறுவனங்களில் சுமார் 3000 ஊழியர்களை பணியில் அமர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.
மீதமிருக்கும் 3000 ஊழியர்களை வீட்டுக்கு செல்லுமாறு காக்னிசண்ட் நிறுவனம் கேட்டுக்கொண்டு இருக்கிறது. இதனால் அந்த ஊழியர்கள் பேஸ்புக் மற்றும் காக்னிசண்ட் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளனர். நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மையால் ஊழியர்களுக்கு மனப்பிறழ்வு, உடலில் காயம், மாரடைப்பு, பக்கவாதம், சம்பள இழப்பு, எதிர்காலம் குறித்த அச்சம் ஆகியவை நிகழ்ந்துள்ளதாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதனால் தங்களுக்கு சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர்களை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என ஊழியர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கடந்த 7-ம் தேதி நடைபெற்று இருக்கிறது. எனினும் இந்த வழக்கு தொடர்பாக காக்னிசண்ட் நிறுவனம் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- முதல்ல ‘விளையாட்டா’ தான் பண்ணேன்... அப்புறம் ‘ரசிகைகள்’ கொடுத்த ‘வரவேற்பை’ பாத்துதான்... ‘பரபரப்பு’ புகார்களில் சிக்கி ‘அதிரவைத்த’ இன்ஜினியர்...
- ‘ஹனிமூனில் இருந்து பெங்களூரு திரும்பிய’... ‘ஐடி நிறுவன கணவருக்கு கொரோனா’... ‘விமானம், ரயில் என பரப்பிய மனைவி’... பொங்கியெழுந்த நெட்டிசன்கள்!
- Video: கொரோனா வைரஸால் 'இறந்த'... சகோதரி 'உடலுடன்' 36 மணி நேரம்... கதறி 'வீடியோ' வெளியிட்ட நடிகர்!
- WATCH VIDEO : ‘ஆயில் கிணற்றுக்குள் மாட்டிக்கொண்டு’... ‘தவித்துப்போன நாய்க்குட்டியை’... ‘உயிரை துச்சமாக மதித்து மீட்ட சிறுவன்’... ‘நெகிழ வைத்த சம்பவம்’!
- ‘கொரோனாவுக்கு’ பயப்படல... இந்த நேரத்துல ‘இதுதான்’ தேவை... மனங்களை ‘வென்ற’ மருத்துவருக்கு ‘குவியும்’ நன்றிகள்... ‘வைரல்’ பதிவு...
- ‘ஃபேஸ்புக்கில்’ அறிமுகம்... ‘காதல்’ திருமணம் செய்து ‘ஐந்தே’ மாதங்களில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...
- ‘விஜய் தேவரகொண்டாவின் பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கி’.. ‘பெண்களிடம் ஆபாச உரையாடல்!’.. ‘பொறி வைத்து பிடித்த போலீஸார்!’
- சிகிச்சை பலனின்றி 'என்ஜினியர்' பலி... கொரோனா வைரசால் உயிரிழந்தாரா?... வாட்ஸ்அப் 'வைரலால்' பொதுமக்கள் அதிர்ச்சி!
- 'வாய்ப்பில்ல ராஜா'... 'கூகுள் நினைச்சாலும் முடியாது'... பட்டையை கிளப்பும் வாட்ஸ்ஆப்பின் புதிய அப்டேட்!
- ‘கொரோனா பாதித்த என்ஜினீயருடன்’... ‘தொடர்பில் இருந்த 36 பேருக்கு நோய் தொற்று அறிகுறி’...