24 லட்சம் கோடி நஷ்டம்... ஊழியர் செஞ்ச சின்ன தவறு.. மொத்த ஷேர் மார்க்கெட்டும் க்ளோஸ்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஐரோப்பிய பங்குச் சந்தையில் நேற்று ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சிக்கு ஊழியர் ஒருவர் செய்த தவறே காரணம் என தெரியவந்திருக்கிறது.

Advertising
>
Advertising

பங்குச் சந்தை

நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் போதும் விற்கும் போதும் மிகவும் கவனமாக செயல்படவேண்டும் என்பதே பங்குச் சந்தையின் பால பாடம். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் சிறிய நிகழ்வு கூட பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிடும். அதேபோல, மிகப்பெரிய நிறுவனங்கள் அல்லது பங்குச் சந்தையின் முக்கிய பிரமுகர்கள் தங்கள் வசம் இருக்கும் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிவெடுத்தால், சில சமயங்களில் ஏனைய முதலீட்டாளர்களும் அந்த அந்நிறுவனத்தின் பங்குகளை விற்றுவிட முடிவெடுக்க வாய்ப்பு அதிகம். இப்படி சில நேரங்களில் ஏற்படும் சிறிய தவறுகள் கூட மொத்த பங்குச் சந்தையையும் பாதிக்கும்.

அப்படித்தான் நேற்று ஐரோப்பிய பங்குச் சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. இதற்கு காரணம் தனியார் வங்கி ஒன்றின் டிரேடர் செய்த தவறுதான் எனத் தெரியவந்திருக்கிறது.

24 லட்சம் கோடி நஷ்டம்

நேற்று காலை ஐரோப்பிய பங்குச் சந்தை துவங்கிய சிறிது நேரத்திலேயே மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்தது தனியார் வங்கி நிறுவனத்தின் டிரேடர் ஒருவர் பரிவர்த்தனை ஆர்டரை மாற்றியதால் ஐரோப்பாவின் பங்குச் சந்தையே ஸ்தம்பித்தது.

இந்த வங்கி நிறுவனத்தை சேர்ந்த டிரேடர் தவறுதலாக செய்த பரிவர்த்தனை ஆர்டர் காரணமாக, சுவீடன் நாட்டு பங்குகள் 8 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தன.மேலும், ஐரோப்பிய பங்குச் சந்தையில் 315 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 24 லட்சம் கோடி) அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டது.

விளக்கம்

இதுகுறித்து நியூயார்க்கை மையமாகக்கொண்டு இயங்கிவரும் அந்த வங்கி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,"இன்று காலை எங்கள் வர்த்தகர் ஒருவர் பரிவர்த்தனையை உள்ளீடு செய்யும் போது பிழை செய்தார். நிமிடங்களில் பிழையை கண்டறிந்து அதை சரிசெய்தோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அயர்லாந்து நாட்டின் பங்குச் சந்தைகள் விடுமுறையில் இருந்ததால், இந்த திடீர் சரிவு அந்த சந்தைகளை பாதிக்காமல் இருந்ததாகவும், ஒருவேளை அவை நேற்று திறந்திருந்தால் இழப்புகள் அதிகரித்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர் பங்குச் சந்தை நிபுணர்கள்.

தனியார் வங்கியின் வர்த்தகர் ஒருவர் செய்த தவறான ஆர்டரால் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது உலகம் முழுவதும் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

 

SHAREMARKET, EUROPEAN, STOCKMARKET, பங்குச்சந்தை, சரிவு, ஐரோப்பா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்