'நாங்க' தான் இனிமேல் 'நம்பர்-1' பணக்கார நாடு...! இத்தனை வருஷமா 'அந்த இடத்துல' இருந்த 'அமெரிக்கா' எத்தனாவது இடம்...? - பிரபல 'நிறுவனம்' வெளியிட்டுள்ள 'ஆய்வு' முடிவு...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

உலகின் பணக்கார நாடு எது என்ற ஆய்வில் ஈடுபட்ட மெக்கின்சி (McKinsey & Co) நிறுவனம் வெளியிட்டுள்ள முடிவு அமெரிக்காவை ஆடிப்போக வைத்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

'நாங்க' தான் இனிமேல் 'நம்பர்-1' பணக்கார நாடு...! இத்தனை வருஷமா 'அந்த இடத்துல' இருந்த 'அமெரிக்கா' எத்தனாவது இடம்...? - பிரபல 'நிறுவனம்' வெளியிட்டுள்ள 'ஆய்வு' முடிவு...!
Advertising
>
Advertising

ஏனென்றால், உலக நாடுகள் அனைத்தையும் அமெரிக்கா தான் ஒரு வளர்ந்த பணக்கார நாடு என்ற ரீதியில் மற்ற நாடுகளை கட்டுப்படுத்த பார்க்கும். ஆனால். மெக்கின்சி (McKinsey & Co) நிறுவனம் நடத்திய ஆய்வில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியுள்ளது சீனா.

China overtaken US to become the richest country in world

அதோடு, கடந்த இரு தசாப்தங்களில் உலகின் சொத்து மதிப்பானது மும்மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் உலகின் 156 டிரில்லியன் டாலராக இருந்த மொத்த பொருளாதார நிகர மதிப்பானது, 2020-ல் 514 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இந்த மொத்த பங்கில் சீனாவின் பங்கு மூன்றில் ஒன்றாக உள்ளது. சீனாவின் பொருளாதார மதிப்பு மட்டும் 120 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதற்கு முன் கடந்த 2000-ஆம் ஆண்டு சீனா வெறும் 7 டிரில்லியன் டாலராக மட்டும் தான் இருந்துள்ளது.

இதுவரை அனைத்து நிறுவனங்களும் எடுக்கப்பட்ட உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் எப்போதும் அமெரிக்கா தான் முதலிடம் வரும். ஆனால், இப்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. அதையடுத்து, மூன்றாவது இடத்தில் ஜெர்மனியும், அடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்ஸிகோ, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவின் பொருளாதார நிகர மதிப்பு விகிதம் 50 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அமெரிக்கா மற்றும் சீனாவின் மொத்த செல்வத்தில், மூன்றில் இரு பங்கினை 10% பணக்கார குடும்பங்கள் வைத்துள்ளது.

CHINA, US, RICHEST, COUNTRY, WORLD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்